இவை மூவரசர் தோன்றுமுன் இருந்த, இருந்திருக்கக் கூடிய, நிலைமைகள். |
ஆனால் மூவரசர் காலமே ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை உடையது. குடியரசுக்காலம் இன்னும் பழமையுடையதாயிருக்க வேண்டும். |
வரலாற்றில் முற்பட்ட கடல் வாணிகத் தொடர்புகள் |
தமிழ் நாகரிகம் தென்னாடு முழுவதும் பரந்திருந்த பழம் பெரு நாகரிகம். அதன் கிளைகள் தென்னாடு கடந்து உலகெங்கும் பரந்து மனித நாகரிகத்தை வளர்த்தன. |
தென்னாட்டு நாகரிகத்தை நாம் இன்று தமிழின நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம் என்கிறோம். |
தமிழின நாகரிகம் ஃவினீய நாரிகத்தைப் போல ஒரு வாணிக நாகரிகம். கடல் வாணிக நாகரிகம். கடலும் கடல் வாணிகமும் மிகமிகப் பழங்காலந்தொட்டே தமிழ் இனத்தவர் உயிர் மூச்சாயிருந்தது. அவர்கள் பழங்காலக் கடல் வாணிக வாழ்வு பற்றிய பல குறிப்புகளை நாம் பரிபாடல் போன்ற பழந்தமிழ் நூல்களில் காணலாம். |
சுமெரிலும் ஏலத்திலும் சிந்துவெளிக் குடியேற்றங்கள் இருந்தன. அந்நாகரிகங்களே சிந்துவெளி நாகரிகத்தின் கிளைகள் என்று பல அறிஞர் கருதுகின்றனர். ஆனால் சிந்துவெளி மூலமாக மட்டுமன்றி, நேரடியாகவே தென்னாட்டு வாணிகப் பழமை பற்றிய சான்றுகள் நமக்குக் கிட்டுகின்றன. |
கி.மு. 4000-க்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்தில் தென்னாட்டின் மயில், யானை, தந்தம், பொன் ஆகிய பொருள்களையும் நாகரிகத் தொடர்பையும் காண்கிறோம். அதே காலத்துக்குரிய சுமேரியரின் தலைநகரான 'ஊ'ரில் உத்தரங்களுக்குத் தென்னாட்டுத் தேக்கமரங்கள் வழங்கின. கி.மு. 3000-ல் தென்னாட்டு வணிகரே |