பக்கம் எண் :

     86
 
பட்டங்களை மேற்கொண்டனர். ஐந்தாம் நூற்றாண்டுவரை அவர்கள் குறுநில
மன்னராகவே இருந்தனர். கி.பி. 450-ல் பாணர்களை ஒடுக்குவதற்காகவே பல்லவன்
சிம்மவர்மனால் அவர்கள் முடியுரிமை அளிக்கப்பட்டனர். ஆனால் அந்
நூற்றாண்டிலேயே கடம்பர்களாலும் 6-7ம் நூற்றாண்டுகளில் சாளுக்கியர்களாலும்
அவர்கள் கீழடக்கப்பட்டு அவர்கள் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். ஆயினும்
சிற்றரசர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வலிமையுடையவர்களாயிருந்தனர். 7-ம்
நூற்றாண்டில் சாளுக்கிய இராஷ்டிரகூடரால் அடக்கப் பட்டபின், கங்கர் தன்னாட்சி
பெற்றனர்.
 
     805 முதல் 810 வரை ஆண்ட இரண்டாம் சிவமாரன் இராஷ்டிரகூட அரசன்
துருவனால் வீழத்தப்பட்டு, மூன்றாம் கோவிந்தனால் மீட்டும் அரசுரிமை
வழங்கப்பட்டான். அடுத்த அரசன் விஜயாதித்தியன் (810-840) கிழக்குச்
சாளுக்கியருடனும், அவன் பின்னர் வந்த முதலாம் பிருதிவீபதி வரகுண பாண்டியனுடன்
திருப்புறம்பயத்தில் போர் புரிந்தனர். திருப்புறம்பயப் போரில் பிருதிவீபதி
உயிரிழந்தான்.
 
     9,10-ம் நூற்றாண்டுகளில் கங்கர் மீண்டும் சோழருக்கும் இராஷ்டிரகூட
அரசர்களுக்கும் கீழடங்கியவர்களாக இருந்து, அப்பேரரசர்களிடையே போரில்
எதிரிகளைத் தாக்கும் கருவிகளாக இருந்து வாழ்ந்தனர். இவ்வகையில் இரண்டாம்
பிருதிவீபதி (900-940) முதலாம் பராந்தக சோழனின் ஆளாய், பானர்களின் நிலத்தோடு
செம்பியன் மாவள வாணராயன் என்ற பட்டமும் பெற்றான். இரண்டாம் பூதுகன் (939-
950) இராஷ்டிரகூட அரசனாகிய மூன்றாம் கிருஷ்ணனுடன் சேர்ந்து தக்கோலப்போரில்
சோழன் முதலாம் இராசதித்தியனைக் களத்தில் கொன்றான். மாரசிம்ஹன் (961-974)
நொளம்ப பல்லவரால் 8-ம் நூற்றாண்டு முதல் ஆளப்பட்ட நொளம்பவாடி
மும்பத்தாறாயிரத்தை வென்றான். கடைசி கங்க அரசனான