வ - று. அணங்குடை 1நோலை பொரிபுழுக்கல் பிண்டி நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்துக்- கணம்புகலக் 6கையிரிய மண்டைக் கணமோடி காவலற்கு மொய்யிரியத் தான்முந் துறும். (இ - ள்.) தெய்வத்திற்குரித்தான எட்கசிவும் நெற்பொரியும் அவரை துவரையும் தருப்பணமும் நிணமும் குடரும் உதிரமும் நிறைவித்துத் திரட்சி விரும்பக் கையிலே பாத்திரத்தையிருத்திய பூதகணங்களையுடைய துர்க்காதேவி வேந்தற்குப்பகை கெடத் தான் முன்னே எழுந்தருளும் எ - று. (5) 41. இதுவுமது மைந்துடை யாடவர் செய்தொழில் கூறலும் அந்தமில் புலவ ரதுவென மொழிப. (இ - ள்.) வலியினையுடைய வீரர் செய்யுந் தொழிலைச் சொல்லுதலும் முடிவில்லாத அறிவினையுடையோர் அத்துறையென்று சொல்லுவர். எ - று. வ - று. தமருட் டலையாத றார்தாங்கி நிற்றல் எமருள்யா மின்னமென் றெண்ணல்-அமரின் முடுகழலின் முந்துறுதன் 2முல்லைத்தார் வேந்தன் தொடுகழன் மைந்தர் தொழில். (இ - ள்.) தம்முடைய சுற்றத்தாரின் மேலாகுதல், தூசிப்படையைத் தடுத்து நிற்றல், எங்கள் படைவீரருள் யாம் இன்ன தன்னமையேமென்றெண்ணுதல், போரிடத்து விரைந்து செல்லும் நெருப்புப்போல முற்படப் புகுதல், முல்லைத்தாரினையுடைய மன்னனுடைய கட்டும் வீரக்கழலினையுடைய வீரர்செய்தி. எ - று. முல்லைத்தார் கூறியது வஞ்சி தானே முல்லையது புறனே" என்றதனால். எ - று. (6) 442. கொற்ற வஞ்சி வையகம் வணங்க வாளோச் சினனெனச் செயகழல் வேந்தன் சீர்மிகுத் தன்று (இ - ள்.) உலகத்துள்ளோர் தொழ வாளாலே வெட்டினானெனச் சொல்லிப் பண்ணின வீரக்கழலினையுடைய அரசனது7நன்மையைப் பெருக்கச் சொல்லியது. எ - று. வ - று.5அழலடைந்த மன்றத் 8தலந்தயரா நின்றார் நிழலடைந்தே நின்னையென் றேத்திக் - கழலடையச் செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக் கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ.
1. சிலப். 5:68-9. 2. சீவக. 547. 3. தொல். புறத். சூ. 6. 4. சிலப்.25 :141. 5. நன்.சூ.440. மயிலை.மேற். (பி-ம்.)6. 'கையிரீஇ மண்டை கண' 7. 'தன்மை' 8. 'தரந்தயரா நின்றார்' |