பக்கம் எண் :

(இ - ள்.) நெருப்புப் பொருந்திய பகைவர் நாட்டு அம்பலத்து நொந்து அழியாநின்றவர் நின்னை நிழலாகச் சேர்ந்தேமென்று புகழ்ந்து சீபாதத்தை வந்துசேரச் சினத்தைப் பாராட்டிக் கோபித்து வந்தார் பட்டுத் தம்பெயர் கெட வெற்றியைப் பெற்று வேலை வலமாக உயர்த்தான், வேந்து எ - று.

(7)

43. 1கொற்றவள்ளை

மன்னவன் புகழ்கிளந்
தொன்னார்நா டழிபிரங்கின்று.

(இ - ள்.) அரசன் கீர்த்தியைச் சொல்லிப் பகைவர்தேசம் கெடுவதற்கு வருந்தியது எ - று.

வ - று.2தாழார மார்பினான் றாமரைக்கண் சேந்தனவாற்
பாழாய்ப் பரிய விளிவதுகொல்-யாழாய்ப்
புடைத்தே னிமிர்கண்ணிப் 3பூங்கட் புதல்வர்
நடைத்தே ரொலிகறங்கு நாடு.

(இ - ள்.) ஆரந்தாழ்ந்த மார்பினையுடையவன் தாமரை மலர் போன்ற கண்கள் சிவந்தன, பாழாய்க் கண்டாரிரங்கக் கெடும்போலும்; யாழையொப்ப முரன்று பக்கத்திலே வண்டுகள் ஆர்க்குமாலையினையும் பொலிவினையுடைய கண்ணினையுமுடைய மைந்தர் சிறுதேரோசை ஆரவாரிக்கும் நாடு எ - று.

நாடு பாழாய்ப் பரிய விளிவதுகொலென்க.

(8)

44. பேராண் வஞ்சி

கேளல்லார் முனைகெடுத்த
மீளியார்க்கு மிகவுய்த்தன்று.

(இ - ள்.) உறவல்லாதார் பெருஞ்செருவைத் தொலைத்த தலைமையையுடைய வீரர்க்குப் பெரிதுங் கொடுத்தது எ - று.

வ - று. பலிபெறு நன்னகரும் பளி யிடனும்
ஒலிகெழு நான்மறையோ ரில்லும்- நலிவொரீஇப்
புல்லா ரிரியப் பொருதார் முனைகெடுத்த
வில்லார்க் கருள்சுரந்தான் வேந்து.

(இ - ள்.) பலியிடும் நல்ல கோயில்களும் துறந்தாரிருக்கும் பள்ளியிடங்களும் ஓசைபொருந்திய நான்கு வேதத்தோர் அகமும் நெருக்குதலையொழிந்து பொருந்தாதார் கெட்டோடப் பொருத வீரர் செருவை வென்ற தன்னுடைய வில்லாளர்க்கு உபகாரம் பண்ணினான், மன்னன் எ - று.

(9)

45. இதுவுமது

அருந்திறை யளப்ப வாறிய சினத்தொடு
பெரும்பூண் மன்னவன் பெயர்தலு மதுவே.


1. சிலப். 25 : 145. 2. முருகு.104; புறநா. 152:10; கம்ப. சூளா. 30. 3. பட்.24-5; குறுந். 61; சீவக.89. 4924-4