பக்கம் எண் :

13

கோளரி = கொல்லும் மடங்கல் (lion)

அரி - Skt. hari.

அரி = அறுக்கப்பட்டது, அறுக்கப்பட்ட சிறுதுண்டு, சிறியது, நுண்மை, மென்மை.

“அரியே ஐம்மை”      (தொல். உரி. 58)

அரிநெல்லி = சிறுநெல்லி.

அரிக்குரல் = நுண்ணியதாய் ஒலிக்கும் குரல்.

அரித்தல் = சிறிது சிறிதாய்ச் சேர்த்தல்.

அரிக்கன் = அரிக்கும் சட்டி.

அரிப்பு வலை = அரிக்கும் மீன்வலை.

அரி = பருப்பினும் சிறிய கூல உள்ளீடு.

அரி = அரிசி

அரிசிக்களா = சிறுகளா.

அரிசிப்பல் = சிறு பல்.

அர் - அரு - அருவு.

அருவுதல் = 1. மெல்லெனச் செல்லுதல். 2. அறுத்தொழுகுதல். “கரையை ஆற்றுவெள்ளம் அருவுகிறது” (உ.வ.). 3. துன்பப்படுத்துதல். “அருவி நோய் செய்து” (திவ். பெரியதி. 9 7 6).

அருவு - அருவி = மலையுச்சியினின்று மரஞ் செடி கல் மண்ணை அரித்தொழுகும் நீர்வீழ்ச்சி.

அருவு - அருகு.

அருகுதல் = 1. குறைதல். “ஒன்னார் மதிநிலை அருக” (இரகு. யாக. 34). 2. அரிதாதல். “அருகுவித் தொருவரை யகற்றலின்” (கலித். 242). 3. அஞ்சுதல். “அஞ்செஞ் சாய லருகா தணுகும்” (சிலப். 30 120). 4. கெடுதல். “பருகு வன்ன அருகா நோக்கமொடு” (பொருந. 77)

அரு - அருமை = 1. பொருள்முடை. 2. எளிதிற்பெற அல்லது காணமுடியாமை. 3. அளவிறந்த பற்று அல்லது மதிப்புமிகை. 4. பெருஞ்சிறப்பு.

அருமருந்தன்ன - அருமந்தன்ன - அருமந்த - அருமாந்த.

அருமைக்காரன் = கொங்குவேளாளர் பூசாரி.

அருகு - அருக்கு = அருமை.