“நிதியின் அருக்கு முன்னி” (திருக்கோ. 275). அருக்குதல் = அருமை பண்ணுதல். அருக்காணி = அருமை. அஞ்சு பேருக்கு அருக்காணித் தங்கை’ (உ.வ.). அரு - அருந்தல் = விலையுயர்வு, பொருளருமை. அருந்தற்படி - Dearness Allowance அர - அரை. அரைத்தல் = 1. தேய்த்தல். 2. தேய்த்துத் தூள் அல்லது களியாக்கல். அரை - அரைவை. அரு - அரை = அருகிய அல்லது சிறுத்த இடை; உடம்பிற் பாதி,பாதி. ஒ. நோ : இடு - இடுகு. இடுத்தல் = சிறுத்தல். இடு - இடுப்பு. இடு - இடை = இடுப்பு, நடு. அர் - அறு - அறை = அரங்கு. அறைக்கீரை = அறையறையாய் வகுக்கப்பெற்ற பாத்தியில் விளையும் கீரை. “அறைக்கீரை நல்வித்தும்” (திருமந். 160). அறை = அறுத்தது, அற்றது. எ-டு உறுப்பறை, கண்ணறை, மூக்கறை (யன்). அறை = அறுத்தது, வரம்பிட்டது. எ - டு : வரையறை. அறு - அறுதி. அறு - அறவு = நீக்கம். எ - டு : வரையறவு. அறு - அற்றம் = ஆடை நீங்குகை, விழிப்பில்லா நிலை. அறு - அறுவு = தீர்ந்துபோதல். ‘அரிசி அறுவாய்ப் போய்விட்டது’ (உ.வ.). அறு - அறுவு - அறுவடை. அறு - அறுப்பு = 1. கதிரறுப்பு. 2. கைம்பெண் தாலியறுப்பு. அறுதாலி = கைம்பெண் (தாலியற்றவள்). |