பக்கம் எண் :

39

உரசு - உரைசு - உரைஞ்சு. உரைஞ்சுதல் = பொருந்தித் தேய்த்தல்.

உர் - உரை. உரைதல் = உரசுதல். உரைத்தல் = தேய்த்தல்.

உரை - உராய். உராய்தல் = பொருந்தித் தேய்த்தல்.

உராய் - உராய்ஞ்சு. உராய்ஞ்சுதல் = பொருந்தித் தேய்த்தல்.

ம. உரசு, தெ. ராயு.

உர் - உரி - உரிஞ் = உராய்தல்.

உரிஞ் - உரிஞ்சு. உரிஞ்சுதல் = உராய்தல்.

உர் - உரி = உடம்பொடு பொருந்தியுள்ள தோல், மரப்பட்டை.

உரி - உரிவை = தோல். ம. உரி.

உரித்தல் = தோலைப் பெயர்த்தல்.

ம. உரி, க. உரிச்சு, தெ. ஒலுத்சு.

உரி = பொருந்திய உறவு அல்லது உடைமை.

உரி - உரிமை. உரி - உரித்து.

உர் - உரு. உருத்தல் = ஒத்தல்.

“நின் புகழுருவின கை”         (பரி. 3 32)

ர் - ற். ஒ. நோ : ஒளிர் - ஒளிறு, முரி - முறி.

உர் - உறு. உறுதல் = பொருந்துதல், உறழ்தல், நேர்தல், தங்குதல், பெறுதல், வலுத்தல். க. உறு.

உறு - உறுப்பு = பொருந்திய பாகம் அல்லது பகுதி.

உற்றுக்கேட்டல் = பொருந்திக் கேட்டல்.

உறு - உறவு. உறவன், உறவினன், உறவாளி, உறவாடுதல்; உறல், உறன்முறை; உற்றார்.

உறாதான் = பொருந்தாதான், பகைவன்.

உறார் = பகைவர். உறாமை = பகைமை.

உறு - உறுத்து, உறூஉ.

செவியறிவுறூஉ = செவியுறுத்தும் அறிவுரை.

உறுத்துதல் = அழுத்துதல்.

உறு - உறை. உறைத்தல் = அழுந்திப் பொருந்துதல், நாவைக் கடுமையாய்த் தாக்குதல், காரமாதல்.