உடன்வந்தி = உடன்வந்த நிகழ்கால நுகர்ச்சிவினை. உடு - உடன் - உடம்பை = மண்ணொடு கலந்த கலங்கல் நீர். உடு - உடல். உடலுதல் = 1. உறழ்ந்து மாறுபடுதல். “உடலினே னல்லேன்” (ஐங். 66). 2. சினத்தல். “உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை” (புறம். 77). உடல் = மாறுபாடு (பு.வெ. 8 1) உடலுநர் = பகைவர். உடல் - உடறு. உடறுதல் = சினத்தல். உடல் - உடற்று (பிறவினை). உடற்றுதல் - சினப்பித்தல். உல் - உ. ஒ. நோ : பொல் - பொ, குல் - கு. பொத்தல் = துளைத்தல். கு = குறு, சிறு. எ - டு : குக் (கிராமம்). உத்தல் = பொருந்துதல், தகுதல். உ - உத்தம் = பொருத்தம், தகுதி. உத்தம் - யுக்த (வ.). உ - உத்தி = 1. விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரித்தற்கு இவ்விருவராய்ச் சேர்தல். ‘உத்திகட்டுதல்’ என்பது உலக வழக்கு. Tel. uddi. 2. சேர்க்கை. 3. பொருந்தும் முறை. ‘நுதலிப்புகுதல்’ முதலிய முப்பத்திரு நூலுரை நெறிமுறைகள். 4. மதிநுட்பம். உத்தி - யுக்தி (வ.) உ - உக்கம் = பொருந்திய பக்கம், இடை (waist). “உக்கம் சேர்த்திய தொருகை” (திருமுருகு. 108) ஒ. நோ : மருங்கு (பக்கம்) - மருங்குல் (இடை). M. ukkam. உக்கம் - உக்கல் = பக்கம். M. ukkal. உக்கல் - உக்கலை = மருங்கின் பக்கம் (hips). |