பக்கம் எண் :

45

உய்வனவு = 1. பிழைப்பு, வாழ்வு. 2. செழிப்பு, செழிம்பு. 3. ஈடேற்றம், வீடுபேறு.

உய்யக்கொண்டான், உய்யவந்த தேவநாயனார் முதலிய பெயர்களில் உய்தல் ஈடேற்றத்தை உணர்த்தும்.

உய்தடி = தளிர்த்து வளரும் வேலிக் கொம்பு.

உய் - உயல் = 1. தப்புதல்.

“உயலாகா வூழ்த்திறந்த வென்னார்”     (நீதிநெறி. 30)

2. வாழ்தல்.

3. உளதாதல்.

“செல்வ முயற்பால தன்றிக் கெடும்”     (குறள். 437)

உயலுதல் = 1. அசைதல்.

“உயலுங் கோதை” (பதிற். 52 17)

2. செல்லுதல், நடத்தல்.

உயல் - துயல். துயலுதல் = அசைதல்.

“துயல்கழை நெடுங்கோட்டு”         (சிறுபாண். 265)

உய - உய்வு = செல்லுகை.

உயவு நெய் = வண்டிச் சக்கரத்திற்கு இடும் ‘மசகு’.

உய - உயவை = 1. செல்லும் வழி.

2. காடு (பிங்.)

3. காட்டாறு (பிங்.)

உய் - உயா = அசைவால் அல்லது வழிச்செலவால் உண்டாகும் வருத்தம், வருத்தம்.

“உயாவே உயங்கல்”          (தொல். சொல். 369)

உய - உயவு. உயவுதல் = வருந்துதல்,

“உண்டென வுணரா வுயவு நடுவின்”     (பொருந. 38)

உயவு - 1. வருத்தம்.

“உயவுநோய் கைம்மிக”         (கலித். 58)

2. உயிர் பிழைக்கச் செய்யும் வழி.

“உய்யா வருநோய்க் குயவாகும்”      (கலித். 139)

உயவு - உயவல் = வருத்தம்.

“சிதாஅ ரோம்பி யுடுத்த யுயவிற் பாண”     (புறம். 69)

உய - உயங்கு. உயங்குதல் - வருந்துதல்.