அசைவு = 1. சலனம். 2. தளர்வு. 3. சோம்பு. 4. நிலைமை கெட்டு வருந்தும் வருத்தம். “இளிவே யிழவே யசைவே” (தொல். மெய்ப். 5). 5. தோல்வி. “அசைவில படை” (தேவா. 568 அசைவு செய்தவன்” (தேவா. 568 6). அசை - வ. அச் - அசன (உணவு). அசை - அசங்கு. அசங்குதல் = அசைதல். “சங்கர நான்முகர் கைத்தலம் விண்டசங்க” (கம்பரா. இராவணன் வதை. 28) அசங்கு - அசக்கு. அசக்குதல் = அசைத்தல். “அகடசக் கரவின் மணியா” (கந்தபு. கடவுள்வா.). ஒ. நோ. : OE. scacan, OS. skakan, ON. skaka, E. shake. அசக்கு - அயக்கு. அயக்குதல் = அசைத்தல். “குன்றுக ளயக்கலின்” (கம்பரா. சேதுப. 10). அசை - அயை - அயர். அயர்தல் = 1. தளர்தல். “அயலார் போ லயர் வேனோ” (திருவாச. 32 9). 2. உணர்வழிதல். அயர்ந்து உறங்குகிறான் (உ. வ.). 3. மயக்கமடைதல். 4. மறத்தல். “ஆயா தறிவயர்ந்து” (பு. வெ. 10, காஞ்சி. 2). 5. அறிவிழத்தல். “ஐம்புல வேடரி னயர்ந்தனை மறந்தென” (சிவஞா. 8). 6. மதிமயங்குதல். “அணைவுறு வைகலி னயர்ந்தனன் மயங்கி” (சிலப். 3 173). 7. வழி படுதல். “பலிசெய் தயரா நிற்கும்” (திருக்கோ. 348). 8. தெய்வமேறி யாடுதல். “சுறவ முண்மருப் பணங்கயர்வனகழிச் சூழல்” (பெரியபு. திருக்குறி. 7). 9. விளையாடுதல். “பிரிவி லாய முரியதொன் றயர” (குறுந். 144). 10. தளருமளவு வேலை செய்தல். 11. செய்தல் (திவா.). ம. அயர்(க்க). தெ. அயிலு. அயர்தி = 1. சோர்வு. 2. மறதி. அயர் - அசர் அயர்தி - அசர்தி - அசதி. அசரப் போடுதல் = தளரவிடுதல், காலந்தாழ்த்துதல். அயை - அயா = தளர்ச்சி. (திவா.). அயாவுயிர்த்தல் = செ. குன்றிய வி.) 1. களைப்பு நீங்கல். 2. வருத்தந் தீர்தல். “அமரர் கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே” (சீவக. 600). 3 நெட்டுயிர்த்தல். “அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுதலும்” (மணி. 21:26). |