10. பாட்டு. 11. தொடர்ச்சி. “தாபதர் தொடைமறை முழக்கும்’’ (கல்லா. 39:10). 12. இடையறாமை. “தொடையிழி யிறாலின் றேனும்’’ (கம்பரா. நாட்டுப். 9). தொடு - தொடர். தொடர்தல் = 1. பின்பற்றுதல். “அவரை...... அரக்கியர் தொடர்குவர்’’ (கம்பரா. ஊர்தேடு. 26). 2. இடையறாது வருதல். “தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி’’ (பதிற். 27 :2). 3. வித்தும் மரமும் போல ஒன்றனையொன்று இடையறாது மாறிமாறிப் பின்பற்றுதல். 4. வழக்குத் தொடர்தல். க. தொடர், தெ. தொடரு. தொடர் = 1. தொடர்ச்சி. 2. தொடரி (சங்கிலி). “தொடர்படு ஞமலியின்’’ (புறம். 74). 3. கைகால் விலங்கு. “தொடர் சங்கிலிகை’’ (திவ். பெரியாழ். 1 7 1). 4. வரிசை. 5. சொற்றொடர். “தழுவு தொடரடுக் கெனவீ ரேழே’’ (நன். 152). 6. நட்பு. “நல்லார் தொடர்கை விடல்’’ (குறள். 450). 7. உறவு. 8. கொடிவழி. ம., க. தொடர். தொடர் - தொடர்ச்சி. தொடர் - தொடர்பு = 1. தொடர்ச்சி. 2. நட்பு. “கேள் போற் பகைவர் தொடர்பு’’ (குறள். 882). 3. உறவு. 4. பிணைப்பு. 5. செய்யுள் (பிங்.). தொடர் - தொடரி = 1. மாழைவளையத் தொடர். 2. புலி தொடக்கி. 3. ஒருவகை முட்செடி. தொடு - தொடங்கு. தொடங்குதல் = துவங்குதல். ம. துடங்ஙுக, க. தொடங் (க்கு), து. தொடகுறி (g). தொடங்கு - தொடக்கு. தொடக்குதல் = 1. கட்டுதல். “நினைத்துன்பத்தாற் றொடக்கினேன்’’ (சீவக. 579). 2. அகப்படுத்துதல். “விளைபொருள்மங்கையர் முகத்தினும்...... சொல்லினுந் தொடக்கும்’’ (கல்லா. 62: 28). 3. பொருத்துதல். 4. சிக்கிக் கொள்ளுதல். “சங்கந் துங்க விலைக்கதலிப் புதன்மீது தொடக்கி’’ (பெரியபு. ஆனாய. 4). 5. செருப்பணிதல். “பாதுகை திருவடி தொடக்கி’’ (விநாயகபு. 80 :278). தொடங்கு - துடங்கு. தொடக்கு - துடக்கு. தொடக்கு = 1. கட்டு. “படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇ’’ (பெருங். மகத. 2 13). 2. ஆதனைக் கட்டும் பாசம். “தொடக்கெலா மறுத்தநற்சோதீ’’ (திருவாச. 37:10). 3. பற்று. “தொடக்கறுத்தோர் |