சுற்றமே’’ (கம்பரா. சரபங். 27). 4. மாதவிடாய்த் தீட்டு. 5. குஞ்சம். “தொடக்கொடு தூக்கி’’ (சீவக. 1343). க. தொடக்கு. தொடு - தொசுக்கு = தகாப் புணர்ச்சி, வைப்பு. தொடு - தொடுசு = 1. தொடர்ச்சி. 2. கூத்திவைப்பு. தெ. தொடுசு. தொடுசு- தொடிசு. துடக்கு - துயக்கு. துயக்குதல் = கட்டுதல். “துயக்குமவ் வினையின் கழிவும்’’ (தணிகைப்பு. நந்தியுப. 110). ம. துயக்குக. துயக்கு = 1. கட்டு. “துயக்கறாத மயக்கிவை’’ (தேவா. 260: 10). 2. ஆசை. “தொண்டையங் கனிவாய்ச் சீதை துயக்கினா லென்னைச் சுட்டாய்’’. (கம்பரா. பொழிலிறுத். 40). தொள் - தொழு - தோழன் = கூட்டாளி, நண்பன். தோழம் - தோழமை= உடன்கூட்டு நட்பு. தொழு - தொடு - தொட்ட = பெரிய. க. தொட்ட. தொடு - தோடு = 1. திரட்சி. 2. திண்ணமான இலையாகிய ஓலை. “வண் டோட்டுத் தெங்கின்’’ (பெரும்பாண். 353). 3. ஓலைச்சுருள். 4. காதணி. “வெளிவெண் டோட்டு’’ (மணிமே. 3 118). 5. விளாம் பழத்தின் ஓடு. “விட்டதடா ஆசை விளாம்பழத் தோட்டோடே’’ (பழமொழி). 6. தொகுதி. “தோடுகொள் வேலின் தோற்றம் போல’’ (புறம். 35). தோடு - தோட்டம் = வளர்ப்புச் செடிகளின் தொகுதி. ம. தோட்டம், தெ., க., து. தோட்ட. தோள் - தோய். தோய்தல் = 1. படுதல். “கால்நிலந் தோயாக்கடவுளை’’ (நாலடி. கட. வாழ்.). 2. தொடுதல் “விண்டோயு மிளைகடந்து’’ (பு. வெ. 6:16). 3. செறிதல். 4. கலத்தல். “தோய்ந்தும் பொருளனைத்துந் தோயாது’’ (கம்பரா. சரபங். 27). 5. அணைதல். “நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர்’’ (குறள். 917). 6. பொருந்துதல். “தாடோய் தடக்கை’’ (புறம். 14). 7. உறைதல். “தோயும்வெண்டயிர்’’ (கம்பரா. நாட்டுப். 28). 8. ஒத்தல். “விசும்புதோ யுள்ளமொடு’’ (மலைபடு. 558). 9. நட்டல். “தோய்ந்தாருட் டோய்ந்தா ரெனப்படுதல்’’ (திரிகடு. 81). துறு - தொறு = 1. கூட்டம். “படைப்பெருந் தொறுவொடும் படர்ந்து’’ (கந்தபு. யுத்த. முதனாட். 15). 2. ஆமந்தை. “தொகைமலி தொறுவை 4. இடைக்குலம். “நலத்தகு தொறுவி னுள்ளேன்’’ (சீவக. 477). தொறு - தொறுவு. தொறு - தொறுவன் = இடையன். |