விலைக்கு வாங்கல் “கோதையினுங் கொள்வார்’’ (நைடத. நகரம். 18). கொள்முதல். கொள்விலை. கொள்ளை = விலை. “சில்பத வுணவின் கொள்ளை சாற்றி’’ (பெரும்பாண். 64). கடன் வாங்கல் கொள்வினை. பெறுதல் “நல்லா றெனினுங் கொள றீது’’ (குறள். 222). கொள் - கோள் - கோளி = பெறுவோன். கவர்தல் “மனையாளை மாற்றார் கொள’’ (நாலடி. 3). “நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்’’ (மதுரைக். 583). கொள்ளையடித்தல் “வேற்றுமைப் புலத்தைக் ............ கொள்ளை கொண்ட தொழிலை’’ ‘பு.வெ. 3:15, கொளு, உரை). கொண்டி = கொள்ளை. “கொண்டியும் பெரிதென’’ (புறம். 78) ம. கொண்டி, ம. கொள்ள, க. கொள்ளெ, தெ.கொல்ல. மிகுதல் கொள்ளக் கிடைத்தது = நிரம்பக் கிடைத்தது. கொள்ளை = மிகுதி. “கொள்ளை மாமதத்த நால்வாய்க் குஞ்சரம்’’ (பாகவ. 1:5:14). கொண்டி = மிகுதி. “கொண்டி யுண்டித் தொண்டையோர்’’ (பெரும்பாண். 454). கொள்ளை நோய் = பெருவாரி நோய். திறைபெறுதல் கொண்டி = திறை. “கொண்டி வேண்டுவ னாயின்’’ (புறம். கொல்லுதல் கொள் - கோள் = கொலை. “கோள்நினைக் குறித்து வந்தான்’’ (சீவக. 264). கோளரி = கொல்லும் அரிமா. கொல் - கொலை. கோண்மா = கொள்ளும் விலங்கு (கம்பரா. இரணிய. 125). |