பக்கம் எண் :

79

கொல்லத்தொழில் செய்தல்

கொல் - கொல்லன் = 1. மரத்தைக் கொல்வது போல் வெட்டும் மரத்தச்சன், “மரங்கொஃ றச்சர்’’ (சிலப். 5 29). 2. மரக்கொல்லனுக்கு இனமான இருப்புக்கொல்லன்.

கருதுதல்

“யார்க்குங் கொடுத்தியெனக் கொள்கின்றிலம்’’ (இலக். வி. 650, உரை). உட்கொள்ளுதல் = உட்கருதுதல். “முத்தியென் றுட்கொள்வார் சிலர்’’ (கந்தபு. பாயி. 28).

மதித்தல்

“கொளப்பட்டே மென்றெண்ணி’’          (குறள். 699).

கொண்டாடுதல்

“தண்பதங் கொள்ளுந் தலைநாட் போல’’      (சிலப். 6 160).

மேற்கொள்ளுதல்

“குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார்’’ (நாலடி. 143).

மதமாக நம்புதல்

“குலனருள் தெய்வங் கொள்கை’’         (நன். பாயி. 26).

கற்றல்

“கொள்ளுநர் கொள்ள’’ (கல்லா. 11 கொள்ளுநர் = மாணவர். கோளாளன்= மாணவன். கொள் - கோள் - கோளாளன்.

துணைவினைகள்

தற்பொருட்டுத் துணைவினை

எ முகம் வழித்துக்கொண்டான், சண்டையிட்டுக் கொண்டனர்.

எதிர்மறை யேவலொருமைத் துணைவினை

எ-டு: அஞ்சாதே கொள்.