“புரைவிடுத் துரைமோ” (சீவக. 1732). 8. (உள்ளீடற்ற அல்லது உண்மையில்லாப்) பொய். “வடிவிற் பிறந்த புகலும் புரை யின்றிக்கே” (ஈடு, 4 3 9). 9. நொய்ம்மை (கனமின்மை). “புரையாய்க் கனமாய்” (தேவா. 174 7). 10. குற்றம். “புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” (குறள். 292). 11. இழிவு. 12. (உட்டுளையுள்ள) வீடு. “புரைபுரை யாலிவை செய்ய வல்ல” (திவ். பெரியாழ். 2 9 1). 13. தவச்சாலை. “புரையுட் புக்கனர்” (கம்பரா. திருவவ. 42). 14. கோவில். “புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி” (பதிற். 15 37). 15. வீட்டறை, கொட்டகையறை. ஆக்குப்புரை (உ.வ.). 16. பெட்டியறை. 17. மாட்டுத் தொழுவம். 18. இடம். ம. புர, வ. புர. ஒ.நோ.: Gk. poros, passage, L., OF., ME., E. pore, minute opening. புரை = துளை, சிறுதுளை. புரை - புரைசல் = 1. துளை. 2. குற்றம். 3. மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று. 4. வலியின்மை. “பிறனுடைய புரைசல்களை எப்படியறியலாம்” (பஞ்சதந். 64). 5. மருமம் (இரகசியம்). 6. குழப்பம். புரையன் = 1. வீடு. 2. இலைக்குடில். புரையுள் = வீடு (பிங்.). புரைப்பு = 1. குற்றம். “புரைப்பிலாத பரம்பரனே” (திவ். திருவாய். 4 3 9). 2. ஐயுறவு. “புரைப்பறத் தெளிதல் காட்சி” (மேருமந். 107). புரையோர் = கீழோர், இழிந்தோர். புரைத்தல் = இன்னாமுரல் (அபசுர) வகை. (திருவாலவா. 57 14, அரும்.). புரைப்படுதல் = மரம் பொந்துபடுதல். “மரம் புரைப்பட்டது” (தொல். உரி. 92, உரை). பொல் - பொள். பொள்ளுதல் = (செ. குன்றாவி.) 1. துளைத்தல். 2. பொளிதல். (செ. கு. வி.) 1. கிழிதல் (W.). 2. கொப்புளம் உண்டாதல். எண்ணெய்ச் சுடர் விழுந்து கை பொள்ளிவிட்டது (உ.வ.). பொள்ளல் = 1. துளைக்கை. 2. பொளிகை. 3. துளை. “சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது” வீதலோ நிற்றல் வியப்பு” (நன். 12) |