பக்கம் எண் :

101

12

புல்6 (துளைத்தற் கருத்துவேர்)

புல்லுதல் = துளைத்தல். இவ் வினைச்சொல் வழக்கிறந்தது. புல் = 1. உட்டுளையுள்ள நிலைத்திணைவகை. “புறக்கா ழனவே புல்லென மொழிப” (தொல். மரபு. 86). 2. ஊனுண்ணா விலங்குணவான தாளுள்ள நிலைத்திணைவகை. “பசும்புற் றலைகாண் பரிது” (குறள். 16). 3. உட்டுளையுள்ள பனை. “அன்றில் புற்சேக்கை புக்கு” (கல்லா. 38 10). 4. பனை வடிவான நாள் (அனுடம்) (பிங்.). 5. உட்டுளையுள்ள தென்னை (தைலவ. தைல.). 6. உட்டுளையுள்ள மூங்கில். புல்லாங்குழல் (உ.வ.). 7. புற்போன்ற கம்பம் பயிர் (பிங்.). புல், கம்பம்புல் (உ.வ.). 8. புல்லரிசி. 9. சிறுமை. “புல்லுளை” (கம்பரா. வரைக்காட்சி. 70). புன்மை = சிறுமை, சிறுதன்மை. 10. இழிவு. “புன்கோட்டி” (நாலடி. 255). புல்லன் = இழிந்தோன். “கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளென்ன” (கம்பரா. தாடகை. 72).

. புல், . புல், தெ. புலு.

புல் - பொல். பொல்லுதல் = 1. துளைத்தல். 2. உளியாற் கொத்துதல். பொல் = உட்டுளையுள்ள பதர்.

தெ. பொல்லு, . பொள்ளு.

பொல்லம் = துளை, ஓட்டை, இழிவு. பொல்லம் பொத்துதல் = 1. நார்ப்பெட்டியின் ஓட்டையடைத்தல். துணிக் கிழிசலை இணைத்துத் தைத்தல். “பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை” (பொருந. 8). பொல்லாப் பிள்ளையார் = உளியாற் கொத்தப்படாத தான்றோன்றிப் பிள்ளையார். பொல்லாமணி = துளையிடப்படாத மணி, மாசிலாமணி.

புல் - புர் - புரை = 1. உட்டுளை. “புரைபுரை கனியப் புகுந்து” (திருவாச. 22 3). 2. உட்டுளைப் பொருள் (பிங்.). 3. குரல்வளை. புரையேறுதல் (உ.வ.). 4. விளக்குமாடம். 5. உள்ளோடும் அல்லது உட்டுளைப்புண். 6. பை மடிப்பு அல்லது அறை (W.). 7. கூறுபாடு.