குறிப்பு: 1. வளைதற் கருத்து, சாய்தல், கோணல், மடங்கல், நெளிதல், வட்டமாதல், உருண்டையாதல், உருள்தல், சுற்றுதல், சுழலுதல் முதலிய இனக் கருத்துகளெல்லாவற்றையுந் தழுவும். 2. வட்டக் கருத்தினின்று முழுமைக் கருத்துப் பிறக்கும். எ-டு: கடனை வள்ளிதாய்க் கொடுத்துத் தீர்த்துவிட்டான். வள்ளிது = வட்டமானது, முழுமையானது. E. roundly = in thorough - going manner. இம் முறையில், பரி என்னும் தென்சொல்லும் வடமொழியில் முன்னொட்டாகி (prefix), அல்லது முழுநிறைவு முழுமைக் கருத்தைத் தோற்றுவிக்கும். எ-டு: பூரணம் - பரிபூரணம். |