பக்கம் எண் :

33

நலித்தல் = வருத்துதல்.

நலிவு = 1. துன்பம். “வையகத்து நலிவுகண்டு” (பு.வெ. 8 34, கொளு). 2. கேடு. “நோற்று நலிவிலா வுலக மெய்தல்” (சீவக. 2727).

நுல் - நுள் - நொள்.

நொள் - நொள்ளா - நொள்ளாப்பு = வருத்தம்.

நொள் - நொய் - (நய்) - நை.

நைதல் = மனம் வருந்துதல்.

நைகரம் = துன்பம். “நைகர மொழிந்து” (விநாயகபு. 57 18)

நை = துன்பம். நைவருதல் = வருந்துதல். “நைவாரா வாயமக டோள்” (கலித். 103 66). நைவு = 1. வருந்துகை. 2.நோய். “நாளு நைவகன்ற” (தைலவ. தைல. பாயி. 1).

நைநை யெனல் = குழந்தை விடாது அழுது தொந்தரவு செய்தல்.

நை - (நய்) - நசு - நசல் = நோய் (W.).

நசலாளி = நோயாளி (W.).

நசிறாண்டி - தொந்தரவு செய்வோன் (யாழ்ப்.).

நசிறாளி - நசிறாணி = தொந்தரவு செய்பவன் (யாழ்ப்.).

ஒ.நோ.: களவாளி - களவாணி.

நசு - நசுவல் = தொந்தரவு செய்பவன் - வள் - து.

நசுநசுத்தல் = தொந்தரவு செய்தல்.

நசுநசெனல் = தொந்தரவு செய்தற் குறிப்பு.

நசு - நச்சு = 1. தொந்தரவு. நச்சுப் பிடித்தவன் (உ.வ.). 2. அலப்பல்.

நச்சுதல் = 1. தொந்தரவு செய்தல். 2. அலப்புதல்.

நச்சுவேலை (நச்சுப் பிடித்த வேலை) = தொந்தரவு உண்டாக்கும் வேலை.

நச்சு - நச்சி = வீண் பேச்சுப் பேசித் தொந்தரவு செய்பவன்.

நச்சுநச்செனல் = தொந்தரவு செய்தற் குறிப்பு.

நச்சுப் பிச்சு = 1. தொந்தரவு. 2. ஓயாது அலப்புகை.

நொய் - (நொயி) - நொசி. நொசிதல் = வருந்துதல்.