பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

நச்சு - நெச்சு.

நச்சு - நத்து. நத்துதல் = விரும்புதல். “நாரியர் தாமறிவர் நாமவரை நத்தாமை” (தமிழ்நா. 74).

நத்து - நெத்து.

நசுநாறி = பிசினாறி.

நுள் - நிள் - நிர் - நிர. நிரத்தல் = (செ.கு.வி.) 1. நெருங்குதல். “கொண்மூக் கூடி நிரந்து” (ஐந். ஐம். 5). 2. கலத்தல். “நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி” (தேவா. 332 9). 3. பரத்தல். “நிரந்த பாய்மா” (சீவக. 1859). 4. நிரம்புதல். “பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை” (தேவா. 194 9) 5. ஓர்மைப்படுதல். இருபகை வரும் நிரந்து போயினர் (உ.வ.).

1. (செ.குன்றாவி.) ஒழுங்குபடுத்துதல். “நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்” (குறள். 648). 2. சமபங்கிட்டளித்தல். எல்லார்க்கும் நிரந்து கொடு (உ.வ.). தெ. நெரயு.

நிர - நிரல் = 1. வரிசை. “நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு” (தொல். செய். 168). 2. ஒப்பு. “நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென” (புறம். 345).

. நிர, ., து. நிறுகெ.

நிரலுதல் = ஒழுங்குபடுதல். “நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு” (தொல். செய். 170).

நிர - நிரை. நிரைதல் = 1. (செ.குன்றாவி.) ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல். வீட்டைச் சுற்றி நிரைந்திருக்கிறது (உ.வ.). 2. முடைதல். வீடுவேயக் கிடுகு நிரைகிறார்கள் (உ.வ.) 3. ஒழுங்குபடுத்துதல். 4. நிரப்புதல்.

(செ.கு.வி.) 1. வரிசையாதல். 2. முறைப்படுதல். 3. திரளுதல். “நிரைவிரி சடைமுடி” (தேவா. 994 9).

நிரை - நிரைசல் = ஓலை முதலியவற்றால் அடைக்கும் அடைப்பு. ப.க. நெரக்கெ.

நிரை = 1. வரிசை. “நிரைமனையிற் கைந்நீட்டும் கெட்டாற்று வாழ்க்கையே நன்று” (நாலடி. 288). 2. ஒழுங்கு (சூடா.). 3. கூட்டம். “சிறுகட் பன்றிப் பெருநிரை” (அகம். 94). 4. ஆன்மந்தை. “கணநிரை கைக்கொண்டு” (பு.வெ. 1 5. குறிலிணையும் குறினெடிலும் ஒற்றடுத்தும் ஒற்றடாதும் இணைந்தொலிக்கும் செய்யுளசை.

. நிர, . நிறி, தெ. நெரி.