பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

நீரெலாம்” (நீர்நிறக். 51). 7. நெய்யா உருகுங் கொழுப்பு. “நெய்யுண்டு” (கல்லா. 71). 8. உளம் ஒட்டும் நட்பு. “நெய்பொதி நெஞ்சின் மன்னர்” (சீவக. 3049).

., . நெய், தெ. நெய்யி. . ஸ்நிஹ் - ஸ்நேஹ.

எண்ணெய் = 1. எள்ளிலிருந் தெடுக்கப்படும் நெய் (நல் லெண்ணெய்). 2. நெய்ப்பொருள், விளக்கெண்ணெய், தேங்கா யெண்ணெய், புன்னைக்கா யெண்ணெய், கடுகெண்ணெய், முதலியன.

நெய்ப்பொரு ளெல்லாவற்றுள்ளும் ஆவின் அல்லது எருமையின் நெய் ஊட்டமான உணவிற்குரியதாய்த் தலைசிறந்த தாதலால், நெய்யென்னும் பொதுப் பெயரையே சிறப்புப் பெயராகக் கொண்டது.

முதன்முதலாக எள்ளின் நெய்யைக் குறித்த எண்ணெய் என்னுஞ் சொல், மிகப் பெருவழக்காய் வழங்கியதால் நாளடைவில் தன் சிறப்புப் பொருளை யிழந்து, நெய்யல்லாத நெய்ப் பொருள்களின் பொதுப் பெயராயிற்று. அதனால், தன் பழம்பொருளைக் குறித்தற்கு “நல்” என்னும் அடைபெற்றது. இதனால், நெய்க்கு அடுத்துச் சிறந்தது நல்லெண்ணெய் என்பது பெறப்படும். “வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்பது பழமொழி.

நெய்த்துவர் - நெய்த்தோர் = நெய்ப்பதமுள்ள அல்லது நெய்போ லுறையும் அரத்தம். “நெய்த்தோர் வாய... குருளை” (நற். 2).

துவர் = சிவப்பு, அரத்தம்.

தெ. நெத்துரு, .நெத்தரு.

நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.). 2. எண்ணெய் (பிங்.). 3. அன்பு. “நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து” (திருக்கோ. 39). 4. பத்தி (தெய்வப்பற்று). “நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி” (திருவாச. 1 13).

பிரா. நேஅம், . ஸ்நேஹ.

நேயம் - நேசம் = 1. அன்பு. “நேசமுடைய வடியவர்கள்” (திருவாச. 9 4). 2. ஆர்வம். “வரும்பொரு ளுணரு நேச மாசறு தயிலம் பாக்கி” (இரகு. இரகுவு. 38). 3. தகுதி. “பூச்சியின் வாயினூல் பட்டென்று பூசைக்கு நேச மாகும்” (குமரே. சத. 59). .நேசம்.