புணரான்” (ஞானா. 48 9). 3. அறிவுடைமை. “செல்வம் புலனே புணர்வு” (தொல். மெய்ப். 11). 4. கண்கூடு. “பெரும்புணர்ப் பெங்கும் புலனே” (திவ். திருவாய். 2 8 3). 5. தெளிவு. 6. தெளிவான வனப்பு என்னும் பனுவல் வகை. “சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலனென மொழிப புலனுணர்ந் தோரே” (தொல். செய். 239) 7. துப்பு. புலனறிதல் (உ.வ.). 8. பொறி போன்ற உறுப்பு. “ஒன்பது வாய்ப்புலனும்” (நாலடி. 47). 9. வயல். “புலனந்த” (பரிபா. 7 புலம் - புலம்பு = நிலம். மெல்லம் புலம்பு = நுண்மணலால் மெல்லிய நெய்தல்நிலம். (திருக்கோவை, 379, உரை). மெல்லம் புலம்பன் = நெய்தல்நிலத் தலைவன். “மெல்லம் புலம்பன் பிரிந்தென” (குறுந். 5). புலம்பு - புலம்பன் = அறிவுடைய ஆதன் (ஆன்மா). “புலம்பனுக் கொன்றும் புணர்ந்திலை போலும்” (திருமந். 2934). புலம் - புலமை = நிலம், வயல். க.பொல. புலம் - புலவன் = 1. அறிஞன். 2. அறிவுள்ள பாவலன். 3. தேவன். 4. அறிவன் (புதன்). புலவன் (ஆ. பா.) - புலத்தி (பெ. பா.). ஒ.நோ.: கிழவன் - கிழத்தி. புலத்தி - புலச்சி = அறிவுள்ளவள். “சிவனிற் புலச்சி தனக்கு” (திருப்பு. 123). ஒ.நோ.: வேட்டுவத்தி - வேட்டுவச்சி. புல்ல = 1. பொருந்த. 2. போல (உவமவுருபு). “புல்லப் பொருவப் பொற்பப் போல” (தொல். உவம. 11). புலம் - புலர். புலர்தல் = தெளிதல், தெளிவாதல். “நல்லா ணெஞ்சமும் புலர்ந்த தன்றே” (சீவக. 1937). 2. விடிதல். “புலர் விடியல்” (பு. வெ. 2 47). ம. புலருக. புலர்ச்சி = விடிகை. “இருளின் புலர்ச்சி யென்றென்று” (வெங்கைக் கோவை, 380). புலர்பு = விடியல். “பனிப்புலர் பாடி” (பரிபா. 11 83). |