பக்கம் எண் :

67

பூண் - பூண்டு = பற்போன்ற பருப்புகள் அல்லது சுளைகள் நெருங்கிப் பொருந்திய பூடுவகை. எ-டு: 1. வெங்காயப் பூண்டு, வெள்ளைப் பூண்டு. 2. சிற்றெச்சம் (vestige, trace). “ஆண்பூண்டு கண்டாலும் பேசாமற் கட்டிட்டாள்.” (விறலிவிடு. 822). ஆரியப் பூண்டை வேரறுக்க வேண்டுமென்பது ஒருசிலர் கொள்கை.

பூண்டு - பூடு = 1. வெங்காயம் அல்லது வெள்ளுள்ளி. 2. நிலத்தொடு படர்ந்த சிறுசெடி. “புல்லாகிப் பூடாய்” (திருவாச. 1 26).

ஒ.நோ.: கூண்டு - கூடு.

பூண் - பூட்சி = 1. பொருந்துகை, பூணுகை (சது.). 2. அணி (கல்லா. 91 உரை). 3. புணர்ப்பு. “பூதப் பூட்சி யுள்ளெழும் போதமும்” (பிரபோத. 31 36). 4. உயிரொடு பூண்ட வுடல் (பிங்.). “புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய்” (தேவா. 1160 6). 5. கொள்கை. 6. மனவுறுதி. “உறுபொரு ளுணரும் பூட்சியோய்” (கம்பரா. உயுத். மந்திர. 66). 7. உரிமை (அக. நி.). 8. வரிவகை. எ-டு: ஈழம் பூட்சி.

பூண் - பூட்டு (பி.வி.). பூட்டுதல் = 1. பொருத்துதல். 2. காளை முதலியவற்றை நுகத்திற் பிணைத்தல். “களிறுபல பூட்டி” (பதிற். 44 16). 3. பொருத்தி அணிதல். “பைந்தார் பூட்டி” (பதிற். 42 10). 4. மாட்டுதல். “பொருசிலை மேற்சரம் பூட்டான்” (ஏரெழு. 17). 5. தொழுவிலடித்தல் (W.). 6. விலங்கு மாட்டுதல் (W.). 7. நாணேற்றுதல். “பூட்டுசிலை” (சீவக. 1788). 8. பூட்டுப் பூட்டுதல். 9. இறுகக் கட்டுதல். “பூட்டிய கையன்” (கம்பரா. குகப். 34). 10. மனத்தை யிணைத்தல். “என்பாற் பூட்டு நண்பு பூண்டான்” (பாரத. வாரணா. 37). 11. ஒப்படைத்துப் பொறுப்பேற்றுதல். “தாதை பூட்டிய செல்வம்” (கம்பரா. வாலிவ. 81). 12. பொருத்திக் கூறுதல் (W.). 13. வழக்குத் தொடுத்தல். “கொடுமைசால் வழக்குப் பூட்டி” (திருவிளை. மாமனா. 14).

. பூட்டுக, . பூடு.

பூட்டு - பூட்டகம் = 1. போலி. எ-டு: பூட்டக வேலை. 2. வீண் பெருமை. “என்ன பூட்டகமோ” (பெருந்தொ. 1275). 3. வஞ்சகம். “பூட்டக மோ விது” (இராமநா. அயோத். 21). 4. மருமம் (இரகசியம்). அந்தச் செய்தி பூட்டகமா யிருக்கிறது (உ. வ.).

. பூட்டக, தெ. பூட்டகமு.

புல் - பொல் - பொரு. பொருதல் = 1. பொருந்துதல். “பொய்பொரு முடங்குகை” (சிலப். 15 50). 2. தொடுதல், முட்டுதல். “விண்பொரு புகழ்” (புறம். 11). “விண்பொரு வியன்குடை” (புறம். 35).