பிடித்தால் இது எளிதாய் முடியும் (உ.வ.). 27. பற்றுக்கோடாகக் கொள்ளுதல். “அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை” (திருவாச. 5 27). 28. புகலடைதல். “உன்னை நான் பிடித்தேன் கொள்” (திவ். திருவாய். 2 6 1). 29. மேற்கொள்ளுதல். “விசுவ ரூபம் பிடித்தானே” (இராமநா. சுந்தர. 19). 30. உணர்ந்து கொள்ளுதல். ஆசிரியன் கற்பித்ததை மாணவர் பிடித்துக் கொள்ள வேண்டும் (உ.வ.). 31. குறிக்கொள்ளுதல். “பிடித்தது முடிக்கவல்ல விச்சையர்” (பிரபோத. 24 52). 32. கடைப்பிடித்தல். “பெருமானுரை பிடித்தேம்” (கம்பரா. நிகும். 143). 33. ஒட்டாரம் பண்ணுதல். ஒரே பிடியாய்ப் பிடிக்கிறான் (உ.வ.). (செ.குன்றிய வி.) 1. ஒட்டிக்கொள்ளுதல். அழுக்குப் பிடித்த துண்டு. 2. தோன்றுதல். மழையிற் பாசம் பிடிக்கும் (உ.வ.). 3. விருப்பமாதல். எனக்கும் அவனுக்கும் பிடிக்காது (உ.வ.). 4. ஏற்றதாதல். அந்தவூர்த் தண்ணீர் எனக்குப் பிடிக்கவில்லை (உ.வ.). 5. செலவாதல். திருமணத்திற்கு ஆயிரம் உருபா பிடிக்கும் (உ.வ.). 6. நிகழ்தல். மலைநகரில் மாலைதொறும் மழை பிடிக்கும் (உ.வ.). ம., க. பிடி. பிடித்தம் = 1. குறைப்பு. சம்பளப் பிடித்தம். 2. சிக்கனம். பிடித்தமாய்ச் செலவு செய்யவேண்டும். 3. மனப்பொருத்தம். தகப்பனுக்கும் மகனுக்கும் பிடித்தமில்லை. 4. விருப்பம். மேனாட்டுப் பொருள்களில் எனக்குப் பிடித்தம் அதிகம். க. ஹிடித்த. பிடித்து = (பெ.) ஒரு கைப்பிடிப் பொருள். “பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்” (குறள். 1037). 2. தொடங்கி. “என் பிறப்பே பிடித்து” (ஈடு, 2 1 1). பிடிப்பு = 1. பற்றுகை. 2. ஒட்டுக. 3. ஊதைப்பற்று (rheumatism). 4. பிடித்தம். 5. கருத்து. “பிறர் செல்வமும் நம்பேறெனப் பிடிப்புள்ள வெம்மிடத்து” (பிரபோத. 27:62). 6. உறுதி. 7. கட்டு. 8. கைப்பிடி. 9. சார்பு, தோது. “ஒருவனுக்குப் பிடிப்பாய்ப் பேசு” (W). 10. நிலைக்களம். ம., க. பிடிப்பு. பிடிமானம் = 1. பிடித்தம். 2. பிடிப்பு. 3. கைப்பிடி. 4. உறுதி. பிடி = 1. பற்றுகை. 2. கைமுட்டி. 3. மற்பிடி. 4. படைக்கலப்பிடி. “தோல்கழியொடு பிடிசெறிப்பவும்” (புறம். 98). 5. உள்ளங்கைப் பிடியளவு. “தன்கேளைப் பிடிகளொறும் வேறாஞ் சுவைபெற வூட்டி” (வெங்கைக்கோ. 377). 6. நால்விரல் கொண்ட அளவு. 7. பணியார வகை. “பிடிசுட்டுப் படைத்தல்” (W.). 8. பேய். “பெண்டிர் |