பிடிபோல” (திருவுந்தி. 35). 9. உறுதி. 10. உதவி. 11. குதிரையின் வாய்க்கருவியிற் கோக்குங் குசை. “மாத்தாட் பிடியொடு” (நெடுநல். 178). 12. மனத்திற் பதிகை. 13. நம்பிக்கை. 14. மதக்கொள்கை. 15. நளிநயம் (அபிநயம்) முதலியவற்றின் எடுப்பு. ம., தெ., க. பிடி. பிடிக்கொம்பன் (சிறு கொம்புள்ள விலங்கு). பிடிக் கொழுக்கட்டை, பிடிகயிறு, பிடிகல், பிடிகாசு, பிடிகாரன், பிடிகிழங்கு, பிடித்தராவி, பிடித்த வேர்ப்பங்கு, பிடித்தாட்டிக்கழி, பிடிச்சிற்றுளி, பிடிச்சீலை, பிடிசாம்பல், பிடிசுட்டுப் படைத்தல், பிடிசுவர், பிடிசுற்றுதல், பிடிசெம்பு, பிடிசோறு, பிடித்தபிடி, பிடித்தாடி (பலகறை), பிடிதண்டம், பிடிதம் (ஐயம்), பிடிநாள் (நன்னாள்), பிடிநெல், பிடிப்பிட்டு, பிடிபாடு, பிடிமண், பிடிமீசை, பிடியரிசி, பிடியல் (சிறுதுகில்), பிடியனம் (குறித்த அளவு கொள்ளும் பானை), பிடியாள், பிடியெழுத்தாணி முதலிய சொற்கள் தொன்று தொட்டு வழங்கி வருவன. கைபிடித்தல் (கைக்கொள்ளுதல்). கைபிடி (கையிற் பெற்றுக்கொண்ட பொருள்), கைபிடிசுவர் முதலிய கூட்டுச் சொற்களும், அரிவாட்பிடி, அறுவாட்பிடி, உளிப்பிடி, கத்திப்பிடி, குடைப்பிடி, கொட்டுப்பிடி முதலிய பிடிவகைப் பெயர்களும்; உடும்புப்பிடி, கடைப்பிடி, குரங்குப்பிடி, குருட்டுப்பிடி, விடாப்பிடி முதலிய பிடிப்புப் பெயர்களும் தொன்று தொட்டனவே. பிண்டம் என்னும் தென்சொல், வடமொழி மரபின்படி ஈறுகெட்டுப் “பிண்ட” என இருக்கு வேதத்தில் நின்று, திரளை, உண்டை என்னும் பொருள்களைக் குறிக்கின்றது. அதனின்று, பிண்டத்வ, பிண்டக், பிண்டன முதலிய தனிச் சொற்களையும்; பிண்டகத்த, பிண்டகரண, பிண்டதர்க்கக முதலிய கூட்டுச் சொற்களை யும், ஏறத்தாழ எழுபதுவரை திரித்துள்ளனர். அங்ஙனமே, பிண்டி என்னும் தென்சொல் வடிவினின்று, பிண்டித, பிண்டின், பிண்டீ முதலிய தனிச்சொற்களையும்; பிண்டிதமூல்ய, பிண்டிதார்த்த, பிண்டீகரண, ஸபிண்டீகரண, பிண்டீபாவ (bh) முதலிய கூட்டுச் சொற்களையும்; ஏறத்தாழ முப்பது வரை திரித்துள்ளனர். ஆரியத்திற்குத் தமிழொடு அல்லது திரவிடத்தொடு தொடர்பில்லையென்றும், சமற்கிருதம் ஏறத்தாழ ஐந்நூறு சொற்களை மட்டும் திரவிடத்தினின்று கடன் கொண்டுள்ளதென்றும், கூறும் பரோ என்னும் சமற்கிருதப் பேராசிரியர் கூட, பிண்டம் என்னும் |