பக்கம் எண் :

91

“இந்திரன் பெண்ணை” (கந்தபு. திருப்ப. 35). 5. மணமகள். “பெண்கோ ளொழுக்கம் கண்கொள நோக்கி” (அகம். 112). 6. மனைவி. “பெண்ணீற் றுற்றென” (புறம். 82). 7. பெண்டன்மை.

. பெண்., .பெண், ஹெண்ணு.

பெண்ணடி = பெண் பிறங்கடை (வாரிசு). “ஒரு பெண்ணடிதன் காணிக்குத் தேடக் கருத்தாகி” (விறலிவிடு. 152).

பெண்ணலி = பெண்டன்மை மிக்க அலி. (தொல். மரபு. 106, உரை).

பெண்ணன் = ஆண்மையற்றவன்.

பெண்ணாண் = கணவன் மனைவியர் (தம்பதிகள்) (நாமதீப. 176).

பெண்ணாறு = கிழக்கு நோக்கி யோடி வங்கக் கடலிற் கலக்கும் ஆறு. “ஆணாறு பெண்ணாறு ஒன்றின்றிக்கே” (ஈடு, 4:4:பிர.).

பெண்ணெழுத்து = நெட்டுயிரெழுத்து (வெண்பாப். முதன் மொழி. 6).

பெண்ணையன் = 1. பெண்டன்மையுள்ளவன். 2. மனைவிக் கடங்கியவன்.

பெண்ணைவாயன் = பெண்டிரைப்போற் பேசுவோன்.

பெண்பிள்ளை = 1. பெண்குழந்தை. 2. பெண்டு. “நாயகப் பெண்பிள்ளாய்” (திவ். திருப்பா. 7). 3. மனைவி.

பெண்பிள்ளைப் பிள்ளை = பெண் பிள்ளை. (மிகைபடக் கூறும் உலக வழக்கு). “பொம்பிளைப் பிள்ளை” என்பது இதன் கொச்சை வடிவு.

பெண்பெண்டாட்டி = பெண்டு. “ஒரு பெண்பெண்டாட்டி ஆணுடை யுடுத்து” (ஈடு, 6 2 பிர.). இச் சொல், இன்று வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில், பொம்மநாட்டி என்னும் கொச்சை வடிவில் வழங்குகின்றது.

பெண்மகள் = 1. பெண்டு (W.). 2. சிறுமி. “பேதைப் பருவத்துப் பெண்மகளை” (தொல். சொல். 164, சேனா.).

பெண்மகன் = சிறுமி. “பெண்மை யடுத்த மகனென் கிளவியும்” (தொல். பெயரியல், 10). இதற்கு, “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை, மாறோக்கத்தார் இக் காலத்தும் பெண்மகனென்று வழங்குப” என்பது சேனாவரையர் உரை.