பக்கம் எண் :

43

புரை = பழைமை.

முகம் - முகர் - முகரி = பழைமை, கிழம். முகரி - மூரி = கிழம், கிழவெருது, பழைமை.

முகரிமை = பேரறிவு.

முது - முதுமை. முது - முதார் - முதாரி = முதிய கன்று, முதுமை,முதிர்ச்சி.

முது - முதை = பழங்கொல்லை. முதை - முதையல் = பழங்காடு.

முது - மூ - மூப்பு.

முது - முதுவல் = பழைமையாற் பழுதானது.

முது - முதிர் - முதிர்ச்சி = மூப்பு, முற்றிய விளைவு.

முது = மூப்பினாலுண்டாகும் அறிவு. முது - முதுக்கு = அறிவு. முதுக்குறைதல் = மகளிர் உலகியலறிவடைதல், பூப்படைதல்.

முதுவன் = மூத்தோன், அறிஞன்.

முது - (முத்து) - முற்று. முற்றுதல் = முதிர்தல்.

(6) முன்னுறுப்பு

உத்தம் = முன்தள்ளிய முந்திரிக்கொட்டை.

உதடு = வாயின் முற்பகுதி. உதடு (உதழ்) - இதழ் = உதடு, உதடுபோன்ற பூவிதழ்.

துதி = யானைக்கு முன்னிருக்குங் கை. துதிக்கை = துதியாகிய கை.

(நுத்தி) - நெத்தி - நெற்றி.

நுதல் = மண்டையின் முற்பாகம்.

முகம் = முகத்தில் முன் நீண்டிருக்கும் மூக்கு, மூக்கும் வாயும் சேர்ந்த மூஞ்சி (muzzle), மூஞ்சியும் கன்னமுஞ் சேர்ந்த முகரை, முகரையும் நெற்றியுஞ் சேர்ந்த முகம் (face), முகம் - முகன்.

குறுக்காக வளரும் அஃறிணை யுயிரிகளுடைய உடலின் முன்புறத்தில் முகமும், முகத்தின் முன்புறத்தில் மூஞ்சியும், மூஞ்சியின் முன்புறத்தில் மூக்கும், இருத்தல் காண்க. பறவையின் மூஞ்சிக்கு மூக்கு அல்லது அலகு என்று பெயர். மக்கள் முகம் தலையின் முன் புறத்திலிருப்பது.