பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

முன்மைக் கருத்து இன்று மறைந்துவிட்டது. இன்றும் தெளித்தல் வினைமுன்னன்றி வேறுபுறத்தில் நிகழாமை காண்க.

(5) முற்செல்லுதல்

இயற்கையான செலவெல்லாம் முற்செலவே.

துள்ளுதல் என்பது ஒரு முறை முன்னோக்கித் தாவுதல்; முற் செலவு என்பது நெடுகச்செல்லுதல். இது செல்லுதல் செலுத்துதல் ஆகிய இரண்டையுந் தழுவும்.

உய்தல் = முன் செல்லுதல், செல்லுதல்.

உய்த்தல் = செலுத்துதல்.

உய் - ஒய். ஒய்தல் = செலுத்துதல்.

“உப்பொய் ஒழுகை”                                         (புறம்.116)

ஒய் - எய். எய்தல் = அம்பைச் செலுத்துதல்.

எய் - ஏ - ஏவு. ஏவுதல் = செலுத்துதல், தூண்டுதல்.

ஏவு - ஏவல் - ஏவலன்.

ஏதல் = அம்பைச் செலுத்துதல். ஏ = எய்தல், அம்பு.

ஏவு = அம்பு.

எய் - எயின் = எய்யும் வேடர்குடி. எயின் - எயினன்.

இனி, எய்நன் - எயினன் - எயின் என்றுமாம்.

எய் - எயில் = மறவரிருந்து எய்யும் மதில்.

உகைதல் = செல்லுதல். உகைத்தல் = செலுத்துதல்.

உகை - அகை. அகைத்தல் = செலுத்துதல்.

ஓசுதல் = செலுத்துதல். ஓசுநன் = மீகாமன், படகோட்டி, பரவன்.

ஓசு - ஓச்சு. ஓச்சுதல் = செலுத்துதல், தூண்டுதல்.

துரத்தல் = போதல் (த. வி.). செலுத்துதல், .தூண்டுதல், நடத்துதல் (பி.வி.).

துர - துரம் - துரந்தா - துரந்தரன் = செலுத்துவோன்,நடத்து வோன், பொறுப்பாளி, தலைவன்.

ஒ.நோ: புர - புரம் - புரந்தா - புரந்தரன் = அரசன் (காவலன்), விண்ணரசன்.

துரம் = பொறுப்பு, தலைமை.