பக்கம் எண் :

63

துர - துரை = தலைவன், சிற்றரசன்.

முன் - முன்னுதல் = முற்படுதல், செல்லுதல்.

முள் - (முடு) - விடு. விடுத்தல் = முற் செலுத்துதல், அனுப்புதல். விடு- விடை - விடையில் - விடையிலான்.

விடு - விடுப்பு. விடை = செலவு, செல்ல உத்தரவு.

முள் - (முய்) - (முயம்) - வியம் = முற்செலுத்துதல், செலுத்துதல், ஏவுதல், தூண்டுதல்.

வியங்கொள் - வியங்கோள் = ஏவல், மதிப்பேவல்.

வியங்கொள்ளுதல் = மாடு குதிரை முதலிய விலங்கைத் தூண்டிச் செலுத்துதல், தேரோட்டுதல், தூண்டுதல், ஏவுதல்.

தேர்வியங்கொண்ட பத்து’ என்னும் ஐங்குறுநூற்றுப் பிரிவுப் பெயரை நோக்குக.

(6) விரைவு (துடுக்கு)

விரைவு அல்லது வேகம் என்பது, ஒப்புநோக்கிச் சொல்லும் உறவுப் பண்பாகும்.ஒன்றன் செலவைத் தனிப்பட வேகம் என்று சொல்ல முடியாது. மாட்டு வண்டியைவிடக் குதிரைவண்டியும், குதிரை வண்டியை விட மிதிவண்டியும், மிதிவண்டியைவிடப் புகைவண்டியும், புகைவண்டியைவிட இயங்கி (motor) வண்டியும், வேகமாகச் செல்லும். ஒரே வண்டியை எடுத்துக்கொள்ளினும், அதன் மென்செல வொடு ஒப்புநோக்கியே அதன் கடுஞ்செலவு வேகம் எனப்படும்.

ஆகவே, இயங்கும் பொருள் ஒன்றாயினும் பலவாயினும், ஒன்றைவிட இன்னொன்றும்,ஒரு செலவைவிட இன்னொரு செலவும் முன் செல்வதே வேகம் எனப்படுகின்றது. ஆதலால், முற்செலவுஎன்பது இயல்பான செலவென்றும், ஒரு செலவினும் இன்னொரு செலவு முற்படுவதே வேகம் என்றும்அறிந்துகொள்க.

விரைவு என்பது ஒரு வினையை முந்தித் தொடங்கி முந்தி முடிப்பதையும், வேகம்என்பது ஒரு வினை செய்தற்கண் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய வினை வீதத்தையும் குறிக்கும்.

i. லகர னகர வெதுகை

ஒல் - ஒல்லென = விரைவாக.

ஒய் - ஒய்யென = விரைவாக.