பக்கம் எண் :

89

கிட்டு - கிட்டம் = அண்மை. கிட்ட= நெருங்க.

துன்னுதல் = நெருங்குதல். துன்றுதல் = நெருங்குதல்.

துறுதல் = நெருங்குதல்.

தூர்தல் = நெருங்குதல்.

(நுள்) - நள் - நண் - நணுகு.

(நுள்) - (நெள்) - நெரு - நெருங்கு.

முட்டுதல் = நெருங்குதல். கிட்டமுட்ட என்னும் வழக்கை நோக்குக. முட்டடி = அண்மை.

முண்டுதல் = நெருங்குதல். முண்டு - மண்டு.

மண்டுதல் = நெருங்குதல்.

(2) செறிதல்

இருபொருள் ஒன்றையொன்றணுகுதல் நெருங்கலும், பல பொருள் ஒன்றையொன்றணுகுதல் செறிதலும் ஆகும். நெருங்கலினும் செறிவு மிக அணுக்கமாகும்.

(உள்) - அள் = செறிவு.

உறு - உற - உறப்பு = செறிவு.

(சுறு) - செறு. செறுத்தல் = செறிதல்.

“செறுத்த செய்யுள்”                                        (புறம். 53)

செறு - செறி - செறிவு.

துன்னுதல் = செறிதல்.

துதைதல் = செறிதல். துதை - ததை.

துவன்றுதல் = செறிதல்.

துறுதல் = செறிதல். துறு - துறுவு - துறுமு - துறும்பு. துறுமுதல் = செறிதல். துறும்புதல் = செறிதல்.

நுள் - நள் - நளி = செறிவு. நள்ளுதல் = செறிதல்.

“நளியென் கிளவி செறிவும் ஆகும்”                    (தொல். உரி. 25)

பொதுளுதல் = செறிதல். முள் - முண்டு - மண்டு. மண்டு = நெருங்குதல், செறிதல். முறு - விறு - வெறு. வெறுத்தல் = செறிதல்.

விறு - விற - விறப்பு = செறிவு.