பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

“விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே”               (தொல். உரி. 49)

முடை - மிடை. மிடைதல் = செறிதல்.

மொய்த்தல் = செறிதல்.

(3) ஒடுங்கல்

ஒடுங்கலாவது நெருக்கமாதல். இரு அல்லது பல பொருள்கள் ஒன்றையொன்று நெருங்கும்போது நெருக்கம் உண்டாகும். அதனால் ஒடுக்கம் ஏற்படும். ஒடுக்கம் இடைவெளி யொடுக்கமும், பொரு ளொடுக்கமும், ஒழுக்க வொடுக்கமும் என மூவகை.

உல் - உல்லி = ஒடுங்கிய ஆள். உல் - உல்லாடி = உல்லி.

உல்லி - ஒல்லி. உல் - ஒல் - ஒல்லட்டை = ஒல்லி.

உல் - உல்கு - (உற்கு) - உற்கம் - உக்கம் = ஒடுங்கிய இடை.

உல் - ஒல் - ஒல்கு. ஒல்குதல் - சுருங்குதல்.

ஒல்கு - ஒற்கம் = ஒடுக்கம், சுருக்கம், தளர்ச்சி. உல் - அல் - அல்கு - அல்குல் = சுருங்கிய இடை. அல்குதல் = சுருக்குதல். அல்கு - அஃகு. அஃகுதல் = சுருங்குதல்.

உள் - ஒள் - ஒரு - ஒருகு - ஒருக்கு. ஒருக்குதல் = ஒடுக்குதல். ஒருக்கு - எருக்கு.

உள் - உடு - உடுகு - உடுக்கு = இடையிலொடுங்கிய கோடங்கி.

உடுக்கு - உடுக்கை.

உடுகு - இடுகு. இடுகுதல் = நெருங்குதல்.

உடுக்கு - இடுக்கு - இடுக்கம் = நெருக்கம்.

இடுக்கு = சிறு சந்து. இடுக்கு - இடுக்கல்.

இடுக்குதல் = நெருக்குதல், நெருக்கிப் பிடித்தல் அல்லது ஏந்துதல். பிள்ளையை இடுப்பில் இடுக்குதல் என்னும் வழக்கைக் காண்க.

இடுக்கு - இடுக்கி = நெருக்கிப் பிடிக்குங் கருவி.