தமிழ்ப்புலவர் வரலாற்றுக்களஞ்சியம் தொகுதி- 4 மகமது உசெயின் (18 நூ) மகாதேவ ஐயர் (20 நூ) ஊர்: | திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர். இவர்அட்டாவதானப் பயிற்சி மிக்கவர். |
நூல்: | நாராயணசாமி நாயுடு, பா என்பவர் இயற்றிய ‘நெட்டூர்ப்புராணம்’ என்னும் நூலுக்கு வழங்கிய சாற்றுக்கவி. |
மகாதேவ பாரதி (20 நூ) நூல்: | இவர் புலவர்கள் கூடிய ஓர் அவையில் அவர்களுக்குக்காற்று வேண்டும் என்பதற்காகப் பங்கா இழுத்தார். அந்தணராகிய இவர் இவ்வாறுஇழுப்பது தகுமா என்று சிலர் வினவ, அவர்களைப் பார்த்து இவர் பாடிய பாடல் ஒன்று,தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றுள்ளது. |
மகாதேவ முதலியார், வா (20 நூ) இவர் இலக்கண இலக்கிய நூல்களையும் சைவசித்தாந்த நூல்களையும் கற்றுத்தேர்ந்தவர்; ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர், கல்லூரிகளில் ஆசிரியராகப்பணியாற்றியுள்ளார்.
|