பக்கம் எண் :

மகாரியர் 

நூல்:திருச்செந்தூர் முருகர் பதிகம், பழநியாண்டவர் பதிகம்,பழநி நான்மணிமாலை, திருமயிலம் இரட்டைமணிமாலை, பரமாசாரியார் பாமாலை, சொக்கலிங்கசாமிகள்வெண்பா, பன்னிருபாட்டு.

மகாரியர் (19 நூ)

நூல்:வேதாந்தகாரிய வைபவப் பிரகாசிகை.

மகாலிங்கக் கவிராசர் (20 நூ)

தந்தை:ம. க. வேற்பிள்ளை.

இவர்தம் தந்தையார் தில்லையில் சைவப்பிரகாச வித்தியா சாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். தந்தையாரைப் போலவே இவரும் புலமையாளர்; செய்யுள்இயற்றும் திறம் பெற்றவர்; இதனால் கவிராசர் என்று அழைக்கப் பெற்றார்.

நூல்:சிறப்புப்பாயிரச் செய்யுட்கள்.

மகாலிங்கக் கவிராயர் (19 நூ)

ஊர்:மழவராயனேந்தல் என்னும் மழவை; வீரசைவர்.
வாழ்விடம்:சென்னை.

இவர் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர், விசாகப் பெருமாளையர் ஆகியோரிடம் பாடங்கேட்டார். சென்னையில் வாழ்ந்து கம்பராமாயணம், தணிகைப்புராணம் முதலிய நூல்களில் பெரும் பயிற்சி பெற்றார். இலக்கணப் புலமை நிரம்பப் பெற்ற இவர் கல்லூரிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.