தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை முதன்முதல் அச்சிட்டவர் இவரே. இப்பதிப்பு 1847-இல் வெளிவந்தது. இவர்தம் காலத்தில் சிறந்துவிளங்கிய காஞ்சிபுரம் சபாபதி முதலியார், பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் நட்பும் புலமைத் தொடர்பும் கொண்டிருந்தார். நூல்: | இலக்கணச் சுருக்கம், பஞ்சதந்திரவசனம், அருணாசலபுராணம்-உரை, போதவாசகம், தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை (பதிப்பு). |
மகா வைத்தியநாதையர் (19 நூ) வே. பெ. : | சிவன்வாள். | ஊர்: | தஞ்சாவூருக்கு அருகில் உள்ள வையைச்சேரி. | தந்தை : | பஞ்சநாத ஐயர் | வாழ்ந்தகாலம் : | கி.பி. 1844 - 1893 |
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இசையுலகில் சிறப்புடன் விளங்கிய இவரை‘சிவன்வாள்’ என்று சிறப்பாக அழைத்தனர். இவர் இறையுணர்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.நாள்தோறும் சிவபூசை முடித்த பின்னரே, உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.பூசையின் இறுதியில் ஒவ்வொரு நாளும் இரண்டு தேவாரப் பதிகங்களைப் பாடுவார். ஓய்வு நேரங்களில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நாயன்மார் வரலாறுகளைக் கதா காலட்சேபம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் முதலில் ஆனை ஐயர் என்பவரிடமும் பின்னர் தியாகய்யரின் மாணவர் மானம்புச் சாவடி வேங்கட சுப்பையரிடத்தும் இசை பயின்றார். தமிழிலும் வடமொழியிலும் பயிற்சி பெற்றிருந்தார். இவரைப் போலவே இவருடைய உடன் பிறப்பாளர் இராமசாமி சிவன் என்பாரும் இசையில் தேர்ச்சி பெற்றவர். இவர் வர்ண மெட்டுக்களையும், இராமசாமி சிவன் சாகித்யங்களையும் சிறப்பாக அமைத்ததனால் ‘சங்கீதவைத்தி’ சாகித்ய இராமசாமி என்று அழைக்கப் பெற்றனர்.சிறுவயதிலேயே இவர்கள் இருவரும்சேர்ந்து கச்சேரி செய்துள்ளனர்.
|