இவர் தமது 12-ஆவது வயதில் கல்லிடைக்குறிச்சி குருபூசையில் சிறப்பாகப் பாடியமையால் பண்டார சந்நிதிகளான சுப்பிரமணிய தேசிகரால் ‘மகா’ என்னும் பட்டம்வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றார். புதுக்கோட்டை அரசரும் இவரது இசைப் புலமையைப் பாராட்டிப் பரிசளித்துள்ளார். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதி அவர்கள் ‘சாகித்யப்புலி’,‘மோனைச்சிங்கம்’ என்னும் பட்டங்களை வழங்கியுள்ளார். சுப்பிரமணிய தேசிகர் இவருக்குத் தங்கத் தோடாக்கள் அளித்துச் சிறப்புச் செய்தார். எட்டையபுரம், திருநெல்வேலி முதலிய இடங்களில் வாழ்ந்த செல்வர்கள் பலர் இவருக்குச் சிறப்புச்செய்தனர். இவர், தஞ்சாவூர் அரண்மனையில் பண்டைக் காலம் முதல் இசைமேதைகளால்இயற்றப் பெற்றுப் பாடப்பெறாமல் இருந்த 72 மேளகர்த்தா மாலிகைக்கு சிவாஜி மகாராசாவின் மாப்பிள்ளை ஸகாராம் ஸாஹேப் விருப்பப்படி வர்ண மெட்டுக்களை அமைத்துள்ளார். இசையுலகில்‘குஹதாசர்’ என்பது இவருடைய முத்திரை. ‘வாதாபி கணபதிம்’ (ஹம்ஸத்வனி) ‘சிந்தயமா’(பைரவி) ‘ஸ்ரீ சுப்ரமணியாய நமஸ்தே’ (காம்போதி) என்னும் கீர்த்தனைகளுக்குப் பாடப்பெறும் சங்கதிகள் இவரால் அமைக்கப்பெற்றவை. மகுதூ முகம்மதுப் புலவர் (19 நூ) ஊர்: | காயற்பட்டணம். | தந்தை: | கண்ணகுமது மகுதூம் பிள்ளை. |
இவர் சமய நூல்களையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் நன்கு கற்றவர். நூல்: | ‘தீனெறி விளக்க வசனக்காவியம்; சீறாவசனகாவியம்.‘தீனெறி விளக்கவசன காவியம்; மதுரை மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர் என்பவர்‘தீனெறி விளக்கம்’ என்னும் பெயரில் செய்யுள் நடையில் பாடிய நூலின் உரைநடையாகும். |
|