மதுரைச் சுள்ளம் போதனார் (சங்ககாலம்) சுள்ளம்போது என்பது ஓர் ஊர். இவ்வூரினரான இவர் மதுரையையடைந்து வாழ்ந்துவந்ததால் மதுரைச் சுள்ளம்போதனார் என்று அழைக்கப்பட்டார். துரைத் தத்தங்கண்ணனார் (சங்ககாலம்) இவர் தத்தன் என்பவருடைய மகனாராகவோ தத்தன் என்னும் வேறுபெயருடைய புலவராகவோ இருக்கலாம். கண்ணன் என்ற பெயருடைய புலவர் பலருள்ளும் இவர் வேறானவர். மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன் தேவனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர்.தமிழ்க் கூத்தனாருடைய மக்களில் இவரும் ஒருவர். மதுரைத் தமிழ்க்கூத்தனார் (சங்ககாலம்) இவர் மதுரையிலிருந்து தமிழ்க்கூத்து வகையில் சிறந்து விளங்கிய சான்றோர் என்ற வகையில் மதுரைத் தமிழ்க்கூத்தர் என்று அழைக்கப்பட்டார். மதுரைத் தமிழ்க்கூத்தர் நாகன் தேவனார் என்ற புலவர் இவர் மகன் என்று சிலர் கருதுவர். தமிழ்க்கூத்தன்நாகன் தேவன் என்ற சான்றோர் பெயரால் சோழ
|