மதுரைக் காருலவியங் கூத்தனார் (சங்ககாலம்) இவரைப் பற்றிய வரலாறு எதுவும் தெரியவில்லை. மதுரைக் கூத்தனார் (சங்ககாலம்) அடைமொழிகளோடு கூடிய கூத்தனார் என்ற பெயர் கொண்ட சங்கப் புலவர்களினும் வேறானவர். மதுரைக் கொல்லம்புல்லன் (சங்ககாலம்) இவர் பெயர் மதுரைக் கொல்லம் புல்லர் என்றும் காணப்படுகின்றது. கொல்லர் மரபில் தோன்றிய புலவர்களில் இவரும் ஒருவர். புல்லர் என்பது புலவர் என்பதன் திரிபு என்று கொள்வர் சிலர். மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர்; கொல்லர் மரபினர் திருத்தண்கால், பொற்கொல்லன் வெண்ணாகனார் என்ற புலவரும் இவரும் ஒருவராக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆயினும் மதுரை என்றமையால் வேறாகக் குறிக்கப்பட்டுள்ளார். நூல் : | அகம் 363; நற்றிணை 285. |
|