பக்கம் எண் :

மதுரைக்கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

சமாசத்தார் கருத்து. இருவரும் ஒருவரே என்ற கருத்தும் உண்டு கணக்காயன் என்ற அடைமொழியினைப் பெற்றுள்ளமையால் இவர் ஆசிரியத் தொழில் புரிந்தவராவர்.

நூல் :அகம் 27, 338, 342; நற்றிணை 23; புறம் 320.

மதுரைக்கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்             (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப்புலவர்களுள் ஒருவர். கள்ளில்தொண்டை நாட்டிலுள்ள ஓர் ஊர். இவ்வூரினரான கடையத்தன் என்பவருக்கு இவர் மகனாராவர். மதுரையில் தங்கியிருந்தமையால் மதுரைக்கள்ளிக் கடையத்தன் வெண்ணாகனார் என்று அழைக்கப்பட்டார்.

நூல் :அகம் 170; புறம் 316.

மதுரைக் கவுணியன் பூதத்தனார்                         (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர்.

நூல் :அகம் 74.

மதுரைக் காமக்கனி நப்பாலத்தனார்                      (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட புலவர்களுள் ஒருவர். இவர் நப்பாலத்தனார், என்ற புலவரினும் வேறானவர். நப்பாலத்தனார், காமக்கனிப் பசலையார், மாறோக்கத்துக் காமக்கனி நப்பாலத்தனார் என்ற புலவர்களினின்றும் வேறானவர்.

நூல் :அகம் 204.