மதுரைக்கடையத்தார் மகன் வெண்ணாகனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் வெண்ணாகன் என்பது. தந்தையின் பெயர் மதுரைக் கடையத்தார். மதுரைக் கண்டரத்தனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த சங்கப் புலவர்களுள் ஒருவர். மதுரைக் கண்ணத்தனார் (சங்ககாலம்) இவர் ஊராற் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் கண்ணத்தனார் என்றும் வழங்கப்படுவர். நூல் : | அகம் 360, நற்றிணை 351. |
மதுரைக் கணக்காயனார் (சங்ககாலம்) இவர் ஊராற் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் நக்கீரனாருக்குத் தந்தையாராவர். பாண்டி வேந்தன்பால் பேரன்பு கொண்டவர். அவனைப் பசும்பூண் பாண்டியன் என்று அழைக்கிறார். கணக்காயன், கணக்காயன் தத்தன் என்று வழங்கப்படுகின்ற சங்கப் புலவரினின்று வேறானவர் என்பதும்
|