பக்கம் எண் :

16மதுரை வீரன் கதை

  
     மகிழ்ந்தான். அன்று இரவு அங்கேயே தங்கி இருந்தனர். விடிந்ததும் அவர்கள்
பயணம் மதுரைக்கு விரைந்தது.
     வீரன் மதுரையை அடைந்ததும் வைகைக் கரையில் கூடாரம் அடித்தார்கள்.
மனைவியுடன் அதில்மகிழ்ச்சியுடன் தங்கினான். மதுரையில் கோட்டைத்தலையாரி
கூடாரத்தை கண்டு மன்னனிடம் முறையிட்டான். மன்னனோ யாரென் பதை அறிய
பிராமணரை அனுப்பினான். பிராமணர்கள் கூடாரத்தின் அருகில் வந்தனர். செய்தியை
அறிந்து மன்னரிடம் கூறினர். திருமலையான் மகிழ்ச்சியடைந்தான்.

     வீரனுக்கு வேண்டிய விடுதியை அமைத்தனர். வீரனை அழைத்துவர வீரர்களை
அனுப்பினான். மன்னனைக் காண வீரன் தன்னை அலங்காரம் செய்து கொண்டு
புறப்பட்டுப் போயினன். திருமலையானைக் கண்டு வணங்கி நின்ற போது மன்னன்
மகிழ்ந்து கள்ளர் பற்றிய விவரம் எல்லாம் கூறினான். கள்ளரை அழிப்பதாக வீரன்
சபதம் செய்தான். விடை பெற்று வீடு வந்தான்.

     அன்று மாலையில் சாப்பிட்டு இளைப்பாறி சொக்கருடைய கோயிலுக்குச்
சென்றான். தீபாராதனை வேளையில் திருடர்கள் வந்து சூழ்ந்தனர். வீரன் தம்
தீரர்களோடு கூடி வெற்றிகரமாகப் போரிட்டான். யானையின் கூட்டத்தில் யாளி
புகுந்ததுபோல் கொன்று குவித்தான் கொள்ளையர்களை. கள்ளரெல்லாம் அழிந்தனர்.

     வீரனது வெற்றி கண்டு வேந்தன் மகிழ்ந்தான். வேந்தனைப் பார்க்க வீரன்
வருவதாக அறிந்தான். உடனே அவனை வரவேற்க ஏற்பாடு செய்தார். வீரனுக்கு
ஆரத்தி எடுக்கப் பெண்கள் விரைந்தனர். ஆரத்திப் பெண்களில் வெள்ளையம்மாளும்
ஒருத்தி, அழகியான அவள் மீது கண் வைத்தான். வீரனை மன்னன் மகிழ்ச்சியுடன்
உபசரித்தான். காலைவேளையில் பேசுவோம் என்று நாயக்கன் விடை கொடுத்து
அனுப்பினான்.

     வீரன் வீட்டிற்கு வந்தான். குளித்தெழுந்து சிவனை எண்ணி திருநீறு பூசினான்.
உண்டு பசியாறினான். இரவிலே அவனுக்குத் தூக்கம் வரவில்லை. எண்ணம்
வெள்ளையம்மாளை வலம் வந்தது. தன்னை அலங்கரித்துக் கொண்டான், மிக