மன்னன் வீரனுக்கு வேண்டிய அணிகலன்கள் பல வற்றை அனுப்பி வைத்தான். செலவுக்கு வேண்டிய பொருட்களையும் கொடுத்தான். வீரன் பொம்மியிடம் செய்தியைச் சொன்னான். குளித்தெழுந்து தன்னை அலங்காரம் செய்து கொண்டான். பொம்மியும் புறப்பட்டாள். நாயக்கர் வழி அனுப்பினார். நால்வகைப் படைகளுடன் மதுரைப் பயணம் தொடங்கியது. | மதுரைக் காண்டம் | வீரன் குதிரையிலும் பொம்மி பல்லக்கிலும் பயணம் செய்கிறார்கள் மங்கம்மாள் சாலை வழியாக மதுரையை நோக்கி படைகள் சென்றன. பேரிகை ழுழங்கியது’ தம்பட்டம், கொம்பு, தவில், முரசு முழங்கின. கவி வாணர்கள் கட்டியம் கூறினர். படைகளின் பயணத்தால் தரையில் தூள் பறந்தது. மணப்பாறையில் கூடாரம் அடித்தனர். களைப்பாறினர்; களிப்புற்றனர் அப்பகுதியிலுள்ளவர்கள் வெகுமதிகளுடன் வந்து பார்த்தனர். அனைவரும் கள்ளர் தொந்தரவைப் பற்றி கூறினர். வீரன் அவர்களைத் தேற்றினான். மணப் பாறை சுப்பையனும் மங்கபதிநாயக்கரும் வந்து விருந்தளித்தனர். வீரன் அதனை ஏற்று மகிழ்ந்தான். மீண்டும் மதுரைப்பயணம் தொடர்ந்து செல்லும் வழியிலு மாம் பூண்டு சோலை வந்தது அங்கே இவர்களை அலக்கையன் தும்பிக்கனப்பூச்சியன் என்ற இருவர் சந்தித்தனர் அவர்களிடம் அடுத்து எங்கே கூடாரம் அடிக்கலாம் என்று விசாரித்த போது அவர்கள் துவரங் குறிச்சியைப் பற்றி கூறினர். உடனே படை துவரங்குறிச்சிக்கு விரைந்தது. துவரங் குறிச்சியை அடைந்ததும் ஊருக்குத் தெற்கே கூடாரம் அடித்தனர். அலக்கையனும் பூச்சியனும் வீரனுக்கு விருந்து வைத்தனர். வீரன் விருந்தைத்தம் படை புடைசூழ உண்டு மகிழ்ந்தான். இருவருக்கும் வீரன் சாலுவையைப் பரிசளித்தான். இரவு தங்கி விடிந்ததும் விழித்தெழுந்து காலைக்கடன்களை முடித்தனர். மீண்டும் பயணம் தொடர்ந்தது. நத்தத்தை லிங்கையன் ஆண்டு வந்தான். அவன் வீரன் வரவறிந்து அவனை வரவேற்க ஏற்பாடு செய்தான். வீரன் நத் தத்தில் தங்கினான். லிங்கன் அளித்த விருந்தை ஏற்று | | |
|
|