அவளைக் கண்டு அவள் மீது ஆசைக் கொண்டான். அவளும் ஒரு நாள் அவனை வீதியில் கண்டு ஆசைப்பட்டாள். இவனை எண்ணி அவன் இரங்கினான். ஒரு நாள் அவளைக் காண வீரன் நடுச்சாம வேளையில் அவளது மாளிகையை அடைந்தான். மதிலேறி குதித்து மாளிகையுள் நுழைந்து மங்கையின் படுக்கை அறைக்கு வந்தான். அவள் தூக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது வீரனது வாசனை அறிந்து வாசலுக்கு வந்தாள். ‘வாருங்கள்’ என்று வரவேற்றாள். அவன் அவளை வாரி அணைத்தான். கூடிக் கலந்தனர். தீராத ஆசைகளைத் தீர்த்தனர். வீரனுக்கு விருந்து வைத்தாள். விடியுமுன் அவளைப் பிரிந்து வீட்டுக்கு வீரன் வந்தான். பொம்மி ஊடலுடன் இருந்தாள். “இவ்வளவு பொழுதும் எங்கே போனீர்கள்? பெண்களுக்காகப் பேய்போல பறக்கின்றீரே! இதற்காகவா நான் உயிருடன் வந்தேன்!” என்று அழுதாள். வீரன் அவளது ஊடலைத் தீர்த்தான். அவள் உணவு பறிமாறினாள். அவன் உண்டு களித்தான். மதுரையில் அப்பொழுது கள்ளர்களின் தொந்தரவு அதிகமிருந்தது. மதுரையைத் திருமலை நாயக்கன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் திருச்சி நாயக்கனுக்கு ஓலை அனுப்பி கள்ளரை அடக்கிட ஆற்றல் மிக்க படை யொன்றை அளிக்குமாறு வேண்டினான். திருச்சி நாயக்கன் யோசித்து பார்த்தான். யாரை அனுப்புவது என்று மந்திரிகளைக் கலந்தான் இறுதியில் வீரனை அனுப்பிட முடிவு செய்தனர். மன்னன் வீரனை அழைத்து செய்தியைச் சொன்னான், வீரனும் மகிழ்ச்சி யோடு ஏற்றுக் கொண்டான். வீரனுக்கு ஐயாயிரம் சேனைகள்’ சிவிகை, வெண்குடை, சாமரம் மேள வாத்தியங்கள், விருதுகள் ஆகியவற்றுடன் வெற்றிலையும் கொடுத்தான். வீரன் அதனைப் பெருமையுடன் பெற்றுக் கொண்டான். தன் விடுதிக்கு வீரன் வந்தான். | | |
|
|