பொழுது விடிந்தது. பொம்மண்ணன் விழித்தான். பட்டத்துக் கத்தி, குதிரை, பொம்மி மூன்றையும் காணாமல் விழித்தான். வீரர்களோடு புறப்பட்டான். வழியெல்லாம் தேடினான். வழிப் போக்கரிடம் கேட்டான். வந்து கண்டான் கூடாரத்தை, பெரும் போர் நடந்தது. வீரன் வந்தவரை எல்லாம் கொன்று குவித்தான். பொம்மண்ணனும் மாண்டான். பொம்மி தந்தையின் இறப்பு கேட்டு புலம்பினாள். இருவரும் வேண்டிய சடங்குகளைச் செய்தனர். பொம்மியை வீரன் தேற்றினான். | திருச்சி காண்டம் | அப்பொழுது திருச்சியை விஜயரங்க சொக்கலிங்க நாயக்கர் ஆண்டு வந்தார். வீரன் பெரும் போர் புரிவதைத் தன் கொத்தளத்தில் நின்று கண்டு களித்தான். இவ்வீரனை மனதுக்குள் பாராட்டினான். தந்தையை இழந்த வேதனையில் இருந்து பொம்மி மீண்டதும் வீரனுடன் கூடிக் களித்தாள். இருவரும் திருச்சிக் கோட்டைக்குள் நுழைவது என்று திட்டமிட்டனர். அவ்வாறே கோட்டைக்குள் செல்ல கூடாரத்தைப் பிடுங்கினர். கோட்டை வாயிலில் நின்றவர்கள் இவர் களைத் தடுத்தனர், விசாரித்தனர். அரசனுக்குச் செய்தி அனுப்பப்பட்டது. தடை இல்லாமல் அனுப்புமாறு அரசன் ஆணையிட்டான். இருவரையும் அரசன் அன்புடன் வரவேற்றான். தங்க விடுதி கொடுத்தான். வீரனைப் பற்றிய விளக்கம் கேட்டான். வீரன் அரண்மனையில் வேலைக்குச் சேர்ந்தான். ஆடை அணிகள் கொடுக்கப்பட்டது. வீரன் படைகளை மேற்பார்வை பார்த்த வண்ணம் இருந்தான். யானை ஏறி தெரு சுற்றுவதும், மாறு வேடங்கள் இட்டு மறைவாக அலைவதுவும், பெண்களைக் கெடுப்பதுமாக, ரங்கநாதரை வணங்குவதுமாகக் காலத்தைப் போக்கினான். வேட்டையும் அவன் பொழுது போக்கு. அந்நாட்டு தேசக் குறிகாரன் கிருஷ்ணப்ப நாயக்கர் அவன் தவமிருந்து பெண்ணை பெற்றெடுத்தான். அவருக்கு மாளிகை யொன்று தனியாகக் கொடுத்திருந்தான். வீரன் | | |
|
|