குழந்தையில்லா குறை. வேதியர்கள் அவனைச் சுற்நி வீற்றிருந்தனர். வேந்தன் விழி வேதியர்களை வெறித்தது-வலம் வந்தது. “புகழ் மிக்க புரோகிதர்களே! கற்றறிந்த வல்லவர்களே! ஆயக்கலைகள் அறுபத்துநான்கினையும் ஆய்ந்தவர்களே! குற்றமற்ற என்குலத்தில் குழந்தையில்லா குறை உள்ளது. இதை எண்ணி எண்ணி நலியாத நாளில்லை. ஏற்றதொரு வழியை எடுத்து உரைத்தால் நல்லது,” என்று சொன்னான் மன்னன். உடனே வேதபிராமணர்கள் “அரசே! எட்டு திக்குகளையும் கட்டியாளும் மன்னவரே! உமக்குக் குழந்தை பேறு வேண்டும் என்றால். கங்கை நதியில் நீராட வேண்டும். விசுவநாதரை வலம் வர வேண்டும். முப்பத்திரண்டு அறங்களும் செய்ய வேண்டும். இவ்வாறு நீர் செய்தால் கேட்டது கிட்டும்; நினைத்தது நடக்கும். மன்னன் மகிழ்ந்தான். கங்கை நதியில் பட்டத்து ராணியுடன் சென்று நீராடினான். பார்ப்பனர்க்குத் தானங்கள் பல செய்தான். விசுவநாதர் ஆலயத்தை வணங்கினான். பிள்ளை வரம் கேட்டு பெருமானை வழிபட்டான். பின்னர் அறங்கள் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனன். சத்திரங்கள், வாவிகள், கோவில்கள், மடங்கள் அமைத்தனன் அந்தணர் தானம், கன்னிகாதானம், அன்னதானம் பூதானம், கோதானம், நீர்தானம், மோர்தானம் ஆகியவை புரிந்தனர். சொல்லப்பட்ட அறங்கள் எல்லாம் சுபமாக செய்து வந்தான். இவற்றை அறிந்த இறைவன் குழந்தைப்பேறு அளித்தார். பட்டத்துராணி பகவான் அருளினால் கருவுற்றாள். பத்தாம் மாதம் ஆனதும் பாலகன் பிறந்தான். முத்தான வாயால் முதல் முறையாக அழுதான். அழகெல்லாம் திரண்ட அற்புதக் குழந்தை அது தேவர்களும் மூவர்களும் அக்குழந்தையை வாழ்த்தினர். குழந்தையிலும் ஒரு குறை அது கொடி சுற்றி பிறந்ததுதான். தோழிமார்கள் துளசி மகாராஜாவிடம் கூறினர். குழந்தை பிறந்தது பற்றி மன்னன் மகிழ்ந்து, மதலையையும் மாதாவையும் காண விரைந்து வந்தான். கண்டான். | | |
|
|