கொடி சுற்றி பிறந்த கோலம் கொண்டான். இதயத்தில் எங்கோ ஏனோ வலி அவைக்கு விரைந்தான் ஜோதிடரை வரவழைத்தான். கண்டதைக் கூறி பலன் கேட்டான். ஜோதிடர்கள் பஞ்சாங்கம் விரித்தார்கள், பலன்களைக் கண்டார்கள். “பிறந்த வேளை பொல்லாத வேளை நகருக்கு நாசம் வந்து விடும்; நாட்டுக்கு நலிவு வரும் குழந்தையை வைத்திருந்தால் குலத்துக்கு ஆகாது காட்டில் போட்டு விடுங்கள்” என்றார் ஜோதிடர்கள். மன்னன் மனம் வெந்தான், மதிமயங்கினான்; கோயில் தெய்வம் குறை வைத்து விட்டதே என்று குமுறினான். வேறு வழி இல்லாமல் ஜோதிடர் சொன்னதைச் செய்யுமாறு ஆணையிட்டான். தாதியர்கள் செய்ய முயன்ற போது தாயுள்ளம் தடுத்தது தேற்றினர் தாதியர்கள். பட்டத்து ராணியோ புலம்பினாள்; பலவாறு பாலனை எண்ணி வருந்தினாள். மன்னன் வந்ததும் மனைவியைத் தேற்றினன். குழந்தையைக் காட்டில் இடுமாறு கட்டளை இட்டான் மன்னன். அவ்வாறே செய்யப்பட்டது. குழந்தை காட்டிலே விடப்பட்டது. காடோ கொடிய வனம் விட்டவர்கள் விலக முடியாமல் வேதனைப்பட்டனர். வேறு வழியில்லை குழந்தை கதறி அழுதது. நாகமொன்று வந்து நிழல் கொடுத்தது தன் படக்குடையால் எவரையும் வெல்ல எமன் அட்சரமும், மந்திர வாளும், அலங்கார வீரன் என்று பேரும் கொடுத்து அந்நாகம் குழந்தையை வளர்த்தது. மதுரை மக்கள் உன்னை வீரன் என வாழ்த்தி வழிபடுவர் மீனாட்சியின் கம்பத்தடியில் இருந்து உலகைக் காப்பாய். முதல் பூசையும் முப்பூசையும் பெறுவாய். பத்து வயதில் படைகளை வெல்வாய் கள்ளரை வென்று மதுரை வீரனாவாய். பெண்ணாலே உனக்கு அழிவு வரும் என்று நாகம் கூறியது. ஒவ்வொரு நாளும் தேவ அமிர்தம் கொடுத்துக் குழந்தையை வளர்த்தது. அக்காசி நகரில் சின்னான் என்ற சக்கிலியன்-அவன் மனைவிக்கு நீண்ட காலமாகக் குழந்தை பேறில்லை. வணங்காத தெய்வமில்லை மன்னன் குழந்தை காட்டிலே | | |
|
|