பக்கம் எண் :

மதுரை வீரன் கதை9

  
    
     விடப்பட்ட அன்று சின்னான் தன் மனைவியைப் பார்த்து ஆவரம் பட்டையைக்
காட்டிலே வெட்டி வருமாறு ஏவினான். குழந்தைக்காக இவன் செருப்பு தானமும்
செய்தான்.

     சக்கிலிச்சி காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாள். செல்லும் வழியில் பல நல்ல
சகுனங்கள் நிகழ்ந்தன. ஆவரம் பட்டை வெட்டும் போது அழகிய குழந்தையைக்
கண்டாள். களித்தாள் அங்கேயே இருந்து குழந்தையோடு கொஞ்சினள். சின்னான்
மனைவியைத் தேடி காட்டிற்கு வந்தான் குழந்தையைக் கண்டான் குதூகலம்
கொண்டான். இருவரும் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்தனர்.

     தச்சனை வரவழைத்து அழகான தொட்டில் செய்தனர். ஆசாரியை அழைத்து
தங்கத்தால் கொலுசு செய்தனர். சின்னான் மனைவி குழந்தையைச் சிங்காரத்
தொட்டிலில் இட்டு ஆரிவரோ’ என்று தாலாட்டினாள் சீராட்டினாள் எண்ணெய் இட்டு
நீராட்டினாள்; நெற்றியிலே நிலக்காப்பு இட்டாள். விழிக்கு மையிட்டாள்; திருஷ்டி
கழித்தாள் மூன்று வயதில் காது குத்தினார்கள்.

     நகர மக்களுக்குச் சக்கிலியன் பிள்ளை வளர்க்கும் சேதி தெரிந்தது. பலர்
மன்னரிடம் போய் செய்தியைச் சொல்லினர். இதைச் சின்னான் அறிந்தான், இனி
காசியில் இருந்தால் ஆபத்து வரலாம் என எண்ணினான். வேறு நாட்டிற்குச் செல்ல
வேண்டும் என்று இரவோடு இரவாகக் காசியை விட்டு கிளம்பினார்கள்.
 

 பொம்மி காண்டம்
 

     காசியை விட்டு புறப்பட்ட சின்னானும் அவன் மனைவியும் குழந்தையுடன் நடந்து
பொம்மண்ணன் சீமைக்கு வந்தனர் இவர்களைப் பார்த்த அரசன் விசாரித்தான்.
‘பிழைப்பதற்காகப் பரதேசம் வந்தோம்’ என்றான் சின்னான். மன்னன் அவனுக்கு
அரண்மனைச் சேவகம் கொடுத்தான். அங்கேயே வீரன் சீரும் சிறப்புமாக வளர்ந்தான்.

     பதினான்கு வயதான போது வீரன் உண்மையிலேயே வீரனாக விளங்கினான்.
தலைப்பாகை, சோமன், பட்டாடை