பக்கம் எண் :

10மதுரை வீரன் கதை

  
     சாலுவை, சந்தனம், மீசை, கஸ்த்தூரி பொட்டு, வாள், வில், செருப்பு இவற்றுடன்
விளங்கினான். வேட்டையாடினான். வீர விளையாட்டுகள் பலவற்றைப் புரிந்தனன்.

     இவ்வாறு இருக்கையில் மன்னன் மகள் பொம்மி பூப்பு அடைந்தாள். அவளை
ஊருக்கு மேற்கே சிறு குடிசைகட்டித் தனியாக வைத்தனர். சோதிடர்கள் அவளுக்குத்
தீங்கு வரும் என்றனர். எனவே அவளைப் பாதுகாக்க அரசன் பலவாறு எண்ணிப்
பார்த்து சக்கிலியன் சின்னானை ஏற்பாடு செய்தான். கட்டுத்திட்டமான காவல் வேண்டும்
என்று கண்டித்து உரைத்தான்.

     சின்னான் இரவும் பகலும் காவல் செய்து வந்தான். ஒருநாள் பெருமழையில்
சின்னான் நனைந்ததால் உடல் நலம் குன்றினான். தன்மகன் வீரனிடம் காவலுக்குச்
செல்லுமாறு கேட்டுக் கொண்டான் வீரனும் புறப்பட்டுச் சென்றான்.

     அலங்கார ரூபனாக வீரன் பொம்மியின் குடிசையை நெருங்கினான். இரவு
வேளையில் இவனைக் கண்ட பொம்மி இவன் யாரென அறியாமல் திகைத்தாள்.
அவனிடம் உரத்தக் குரலில் விசாரணை செய்தாள். வீரன் தான் சின்னானின் மகன்
என்று விளக்கினான். பொம்மியோ குடிசைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள்.

     வீரனோ பொம்மியிடம், “பெண்ணே! நீ கட்டிவில் படுத்துள்ளாய் நான் வெளியே
தனியாக இருப்பதா? இருட்டில் மழையில் நனைந்த வண்ணம் இவ்வாறு துன்புறுவதா?
என்னை குடிசைக்குள் அனுமதித்தால் நல்லது,” என்றான். இவனது துடுக்குத் தனத்தைக்
கண்ட பொம்மி சினம் கொண்டு வெறுத்து உரைத்தாள் “என்மனம் பதைக்குதடி
தலைபோனாலும் உன்னை விடுவதில்லை பஞ்சைணையில் இருவரும் கூடி இருப்போமடி!
உன் வடிவுக்கு ஏற்றவன் நானடி”

     பேசினான். பொம்மி தன் விதியை நொந்து வேதனைப்பட்டாள். கண்ணீர்
சொரிந்தாள். வீரன் குடிசைக்குள் நுழைந்து மங்கையை எடுத்து மடிமீது வைத்தனன்.
“நான் காசிராஜனின் மகன் என்று உண்மையைச் சொன்னவுடன் பொம்மி தன்
உள்ளத்தைப் பறிகொடுத்தாள். வீரன் அழகை ஆராதனை செய்தாள். அவளுக்கு அவன்
சந்தனம் பூசினான்; பூச்சூடினான். அவள் அவனுக்கு வெற்றிலை