பக்கம் எண் :

மதுரை வீரன் கதை11

  
     கொடுத்தாள். மன்னவனே! எனக்காகவே நீர் பிறந்து வளர்ந்தீரோ’ என்று
மகிழ்ந்தாள். இருவரும் கூடிக் கலந்தனர், கந்தனும் வள்ளியும்போல.

     பொம்மி வீரனின் காலைத்தொட்டு வணங்கினாள். வீரன் காரணம் கேட்டான்.
அவள் தன் ஐயங்களைக் கேட்டாள். மன்னன் மகனான வீரன், மாதிக சின்னான் மகன்
ஆனவிந்தை என்ன என்று கேட்டாள். வீரன் தன் வரலாற்றைக் கூறினான். மங்கை
மகிழ்ந்தாள். பொழுது விடிந்தது. பிரிந்தனர் இருவரும்.

     பொம்மி குடிசைக்கு வெளியே இருந்த கேணியில் மேனியைச் சுத்தம் செய்தாள்.
சிவனை எண்ணி திருநீறு பூசிக் கொண்டாள். வீரன் தன் வீட்டிற்குப் போனான்.
வளர்த்தவர்கள் வாஞ்சையுடன் வரவேற்றனர். இவ்வளவு நேரமும் என்ன செய்தாய் என்று
கேட்க, மழையில் நனைந்து தூங்கி விட்டேன் என்று சொன்னான். சக்கிலிச்சி உணவு
படைத்தாள். வீரன் உண்டு மகிழ்ந்தான்.
           
     மாலை வந்தது. வீரனைக் காவலுக்குச் செல்லுமாறு சின்னான் வேண்டினான்.
வீரனும் மகிழ்ச்சியுடன் தன்னை அலங்காரம் செய்துகொண்டு புறப்பட்டான். ஒரு
மாங்கலியமும் எடுத்துச் சென்றான். பொம்மியிடம் அவளுக்கு மாங்கல்யம்
சூட்டப்போவதைத் தெரிவித்தான். பொம்மி அதையெண்ணி அஞ்சினாள். ‘மாங்கல்யம்
கண்டால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்’ என்பதை விளக்கினான். வீரன் அவளைத்
தேற்றி தாலியைக் கட்டினான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இருவரும் இரண்டாம்
இரவை இன்பமுடன் கழித்தனர். அணைத்து விளையாடி தம் ஆவலைத் தீர்த்தனர்.

     இறுதியில் பொம்மி வீரனிடம் தன் நிலையை விளக்கினாள். குடிசை வாழ்வு
நாளையுடன் முற்று பெறுகிறது, என்றும் பெற்றோர் மறுநாள் அரண்மனைக்கு அழைத்துச்
செல்வர் என்றும் பிறகு இருவரின் நிலையும் என்ன என்றும் கேட்டனள். அவளை அவன்
தேற்றினான். அவள் கோட்டையின் வலிமையைச் சொன்னான். அவனோ தன்
வலிமையைக் கூறினான். விடிந்ததும் வீரன் அவளைப் பிரிந்து வீட்டுக்குச் சென்றான்.

     வீட்டில் சின்னான் வீரனை அன்புடன் வரவேற்றார். பொம்மிக்குச் செருப்பு
தைக்குமாறு அரசன் கட்டளையை