பக்கம் எண் :

35

அரச னாக வாழ்ந்து வந்த
     அரிச்சந் திரனோ, சூழ்ச்சியால்
அரசி ழந்து மனைவி மக்கள்
     அடிமை யான நிலையிலும்,

‘உண்மை ஒன்றே உரைப்பேன், இந்த
     உயிரே போவ தாயினும்’
என்று சொன்ன காட்சி காந்தி
     இதயம் தொட்டு விட்டது!

‘உண்மை நானும் உரைப்பேன்’ என்றே
     உறுதி காந்தி கொண்டனர்.
கொண்ட தோடு வாழ்ந்தும் காட்டிக்
     கோபு ரம்போல் உயர்ந்தனர்.