பக்கம் எண் :

34

அரிச்சந்திரன் நாடகம்
 

அந்தக் காலம் காந்தி ஊரில்
     அரிச்சந் திரனின் நாடகம்
வந்த செய்தி கேட்ட வுடனே
     மக்கள் பார்க்கக் கிளம்பினர்.

அந்த நாட கத்தைக் காண
     ஆவல் கொண்ட காந்தியும்
தந்தை யாரின் இசைவு பெற்றே
     அன்று பார்க்கச் சென்றனர்.