அன்றைய தினமோ சனிக்கிழமை அரைநாள் பள்ளி. ஆயினுமே மாலையில் உண்டு பயிற்சியுமே. மாணவர் அனைவரும் வந்திருந்தார். அன்று நோயால் அவர்தந்தை அதிகத் துன்பப் பட்டதனால், அருகில் இருந்து பணிவிடைகள் அன்புடன் காந்தி செய்தனரே. வானில் சூரியன் தெரியாமல் மறைந்தது மேகம் அச்சமயம். வேளை தெரிந்து கொள்வதற்கும் வீட்டில் இல்லை கடிகாரம். காலம் கடந்தே பள்ளிக்கு காந்தி நடந்து சென்றனரே. பயிற்சி முடிந்து மாணவர்கள் பள்ளியி லிருந்து திரும்புவதை வழியில் காந்தி கண்டனரே; வருத்தம் மிகவும் கொண்டனரே. | | |
|
|